போரட்டத்தை பொலிசாரே கலவரமாக்கியுள்ளனர் - அத்துரலிய ரத்ன தேரர்

Published By: Digital Desk 3

10 Jun, 2020 | 03:03 PM
image

(இராஜதுரை  ஹஷான்)

சுகாதார  அறிவுறுத்தல்களை பின்பற்றி அமெரிக்க தூதரகத்தின் முன்பாக  முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை  பொலிஸாரே அமைதியற்ற போராட்டமாக மாற்றியமைத்தனர் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

அமெரிக்க தூதரகத்தில் முன்பாக நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற போராட்டத்தில் முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில்  வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமெரிக்கா  பொலிஸாரினால் கொல்லப்பட்டதாக   கறுப்பு இனத்தவரான  ஜோர்ஜ் புளோய்ட்டினின் மரணத்திற்கு  நியாயம் கோரியும்.

அமெரிக்காவில் தற்போது சிவில் சமூகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும்  அடக்குமுறைக்கு  எதிர்ப்பு  தெரிவித்தும்  முன்னிலை சோசலிச கட்சி மற்றும்  சமூக ஆர்வளர்களின் அமைப்பினால் நேற்று முன்தினம்  அமெரிக்க தூதரகத்தின்   முன்னாக அமைதி வழி போராட்டம் சுகாதார   பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டது.

அமெரிக்க தூதரகத்தின்  முன்னாக போராட்டத்தில் ஈடுப்பட வேண்டாம் என  நீதிமன்றம் தடையுத்தரவு  வழங்கியுள்ள நிiலையில்  போராட்டத்தில் ஈடுப்பட்டமை முற்றிலும் தவறான செயற்பாடாகும். இருப்பினும்  பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பட்சத்தில் ஒரு சில  காரணிகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

சுகாதார  பாதுகாப்பினை காரணம் காட்டி பேச்சு  சுதந்திரம் முடக்கப்படுகின்றது.  பொது மக்கள்  தங்களின் அரசியல் கருத்துக்களையும், பொது கருத்துக்களையும்  சுதந்திரமான குறிப்பிடுவதற்கு  அரசாங்கம் தடை விதிக்க முடியாது. 

தற்போதைய செயற்பாடுகள் எவ்வாறான நிலைக்கு அடித்தளமிடுகிறது என்பதை மக்கள் தெளிவாக புரிந்துக் கொள்ள  வேண்டும். அனைத்து காரணிகளையும்  அடிப்படையாகக் கொண்டு பொதுத்தேர்தலில் சிறந்த தீர்மானத்தை எடுப்பது அவசியமாகும். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53