பாராளுமன்றத்தை கலைத்தமையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றது ஐ.தே.க.

Published By: Digital Desk 3

09 Jun, 2020 | 08:55 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்க செய்யக் கோரி ஐக்கிய தேசிய கட்சி சார்பில்   உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை அக்கட்சி இன்று வாபஸ் பெற்றது. குறித்த மனு மீதான பரிசீலனைகள், உயர் நீதிமன்ற நீதியர்சர்களான  விஜித் மலகொட மற்றும் முர்து பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவினர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரரான ஐ.தே.க. பொதுச் செயலர் அகில விராஜ் காரியவசம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரோலன்ட் பெரேரா மனுவினை வாபஸ் பெற அனுமதிக்குமாறு கோரினார். இதற்கு  நீதிமன்றம் அனுமதித்தது. அதன்படி குரித்த மனு வாபஸ் பெறப்பட்டது.

முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம்  சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மனுவில் ஜனாதிபதி சார்பில் சட்ட மா அதிபரும், சட்ட மா அதிபரும்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரண ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில்,  அரசியலமைப்புக்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள்  பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டு புதிய பாராளுமன்றம் கூட்டப்படல் வேண்டும் எனவும், அதன்படி ஜனாதிபதியால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி  பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஏப்ரல் 25 இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் தற்போது அந்த திகதி ஜூன் 20 என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அது அரசியல் அமைப்பை மீறும் நடவடிக்கை எனவும் அதனால் ஜனாதிபதியின்  வர்த்தமானியை  வலுவற்றது என அறிவிக்குமாரும் அகில விராஜ் காரியவசம் தனது மனுவில் கோரியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17