ஜோர்ஜ் பிளொய்ட் கொலை; முன்னாள் பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜர்

Published By: Digital Desk 3

09 Jun, 2020 | 08:39 PM
image

அமெரிக்காவில் மினிபொலிஸ் நகரில் மே 25 ஆம் திகதியன்று ஜோர்ஜ் பிளொய்ட் என்ற கறுப்பினத்தவர் பொலிஸ் காவலில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

அவர் கழுத்தில் டெரக் சவின் என்ற வெள்ளை இன பொலிஸ் அதிகாரி முழங்காலை வைத்து நெரித்துக் கொன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வன்முறைக்களமாக மாறியது.

மேலும், அவரை கொலை செய்த பொலிஸ் அதிகாரி டெரக் சவின் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜோர்ஜ் பிளொய்ட்டின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று ஹவுஸ்டன் நகரில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், முதல்முறையாக இன்று டெரக் சவின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது மின்னசோட்டா அரச சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெரக் சவின், காணொளிக் காட்சி வாயிலாக நீதிபதிகள் முன் ஆஜரானார்.

அவர் மீது மூன்றாம் நிலை கொலைக் குற்றம், இரண்டாம் நிலை கொலைச் செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவருக்கான பிணை தொகை 10 இலட்சம் டொலர் முதல் 12.5 இலட்சம் டாலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தீவிரத்தை வைத்துப் பார்க்கையில், அவருக்கு பிணை வழங்கினால் தப்பித்து ஓட முயற்சிக்கக்கூடும் என மின்னசோட்டா அட்டர்னி ஜெனரல் மேத்யூ பிராங் வாதிட்டார்.

வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 29ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஜோர்ஜ் பிளொய்ட்டின் இறுதி அஞ்சலி இன்று நடைபெறவுள்ள நிலையில், நேற்று அவரது உடல் பொதுப்பார்வைக்காக வைக்கப்பட்டது.

மேலும், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென், ஜோர்ஜ் பிளொய்ட்  குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஜோர்ஜ் பிளொய்ட்டின் உடலை அவரது தாயாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47