சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவை கடுமையாக சாடுகிறது பொதுஜன பெரமுன

Published By: Digital Desk 3

09 Jun, 2020 | 03:39 PM
image

(இரஜதுரை ஹஷான்)

பொதுத் தேர்தலுக்கான திகதியை  தீர்மானிப்பதற்கு  ஏற்படும் காலதாமதம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடும் காரணிகள்  பொருத்தமற்றதாகும்.   எதிர் தரப்பினருக்கு  சாதகமாகவே ஆணைக்குழு செயற்படுகிறது  தேர்தல் ஆணைக்குழு  ஸ்தாபித்த காலத்தில் இருந்து தேர்தல்கள் ஏதும் உரிய காலத்தில் நடத்தப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுத்தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்து இழுப்பறி  நிலையில் உள்ளது. தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடும் கருத்துக்கள் முரண்பாட்டை தோற்றுவிப்பதாகவும், பொருத்தமற்றதாகவும் உள்ளது. ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாகவே ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள் என்பது பல  சம்பங்கள் ஊடாக   வெளிப்பட்டுள்ளது.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழு   ஸதாபிக்கப்ட்ட காலத்தில் இருந்து எந்த தேர்தலும் உரிய  காலத்தில் இடம் பெறவில்லை.  உள்ளுராட்சி மன்ற தேர்தல்  3 வருட காலம் பிற்போட்ட நிலையில்  நீதிமன்ற தீர்ப்பின் ஊடாகவே நடத்தப்பட்டது .  மாகாண சபை   தேர்தலை பழைய தேர்தல் முறையிலும், புதிய தேர்தல் முறையிலும் நடத்த முடியாத   நிலை தோற்றம் பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து   பாராளுமன்றில் நிலையான அரசாங்கம் தோற்றம் பெறும் என  எதிர்பார்த்தோம். கொரோனா வைரஸ் தாகக்த்தை  எதிர் தரப்பினர் அரசியல் தேவைக்கு  பயன்படுத்திக் கொண்டார்கள். பொது காரணிகளை கொண்டு  பொதுத்தேர்தல் திகதி குறிப்பிடாமல் பிற்போடப்பட்டுள்ளது.  பாதுகாப்பான முறையில் தேர்தலை   நடத்த முடியும் என  சுகாதார  தரப்பினர்  அறிவுறுத்தல் வழங்கியும் ஆணைக்குழு பொறுப்பற்ற விதமாகவும், மந்தகரமாகவும் செயற்படுகிறது.

தொடர்ந்து பொதுத்தேர்தலை  பிற்போடுவதற்கு  இடமளிக்க முடியாது   வெகுவிரைவில் தேர்தல் பாதுகாப்பான முறையில்  நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்துவது மாத்திரமே ஆணைக்குழுவின் செயற்பாடு  எவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்பதை  மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08