நியூஸிலாந்தில் இருபதுக்கு - 20 தொடரை நடத்த டீன் ஜோன்ஸ் யோசனை

Published By: Digital Desk 3

09 Jun, 2020 | 12:53 PM
image

நியூஸிலாந்து கொரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதால் அவுஸ்திரேலியாவுக்குப் பதிலாக உலக இருபதுக்கு 20 தொடரை நியூஸிலாந்தில்  நடத்தலாம் என அவுஸ்திரேலிய முன்னாள் வீரரும்  வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ்  யோசனை கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை உலக இருபதுக்கு 20 தொடரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளவில் விளையாட்டுப் போட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால்,  உலக இருபதுக்கு 20 தொடர் இம்முறை நடைபெறுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என சந்தேகம் எழுந்துள்ளது. இத்தொடர் நடத்தப்படுவது குறித்த ஐ.சி.சி.யின் இறுதித் தீர்மானத்துக்கான கூட்டம் நாளைய தினம் (10) நடைபெறவுள்ளது.

இவ்விடயம் குறித்து அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள டின் ஜோன்ஸ்,

“நியூஸிலாந்தில் கடந்த 12 நாட்களாக கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. நியூஸிலாந்தில் அடுத்த வாரம் கொரோனா எச்சரிக்கை வழிமுறை ஒன்றுக்கு மாறலாம்.

குறிப்பாக இதே நிலை அங்கு நீடிக்கும் பட்சத்தில் சமூக விலகல் நடவடிக்கை மற்றும் மக்கள் கூட்டம் சேர்வதற்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவை அடுத்த வாரத்தில் விலக்கிக்கொள்ளப்படலாம் என நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.

எனவே, சமூக இடைவெளி, மக்கள் கூட்டத்துக்கான தடை போன்றவை விலக்கிக் கொள்ளப்படும். எனவே உலக இருபதுக்கு 20 தொடரை நியூஸிலாந்தில் நடத்தலாம். இது ஒரு யோசனைதான்” என டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று முதல் நியூஸிலாந்தில் தொற்று பரவுவதை தடுக்க விதிக்கப்பட்டிருந்த வழிமுறைகள் தளர்த்தப்பட்டு  பழைய மாதிரியான சுதந்திர வாழ்க்கைக்கு அந்நாட்டு மக்கள் திரும்பியுள்ளனர். அந்நாட்டில் 1154 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதில் 22 பேர் மாத்திரமே உயிரிழந்ததுடன் ஏனைய அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன் கடந்த 17 நாட்களில் எவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நாடாக மாறியுள்ளது நியூஸிலாந்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09