உலகின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுளின் பிரான்ஸ் தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

கூகுள் நிறுவனம் தனது அனைத்து விதமான செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக, பல்வேறு நாடுகளிலும் தனது கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மத்திய பாரிஸில் உள்ள கூகுள் தலைமை அலுவலகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் பிரான்ஸ் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். 

நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக பிரான்ஸ் கூகுள் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தனர். 

பின்னர் அவர்கள் அனைத்து விதமான ஆவணங்களையும், பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களின் தகவல்களையும் சோதனை செய்தனர்.பிரான்ஸில் உள்ள நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.