தேர்தல் ஒத்திகையில் தோல்வியே அதிகம் -மஹிந்த தேசப்பிரிய 

08 Jun, 2020 | 10:59 PM
image

(ஆர்.யசி)

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடைபெறுகின்றதா  என்பதை அவதானிக்க எதிர்வரும் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் தேர்தல் ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

அம்பலாங்கொடையில் நடத்தப்பட்ட தேர்தல் ஒத்திகையில் தோல்வியே அதிகம் என்கிறார் தேசப்பிரிய.

தேர்தல்கள் திணைக்களத்தில்  இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல் அறிக்கையொன்று சுகாதார பணிப்பாளரினால்   எமக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வழிகாட்டலுக்கு அமைய பரீட்சார்த்த தேர்தல் ஒத்திகையை நேற்று  அம்பலாங்கொடையில் நடத்தினோம்.

இதில் பல விடயங்கள் தோல்வியில் முடிந்துள்ளது. முக்கியமான விடயமான கைகளை கழுவும் விடயத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. 

கைகளை கழுவிய பின்னர் வாக்குச் சீட்டில் கைவைத்தால் சீட்டு நனைகின்றது. "செனட்டேசர் ' கிருமி தொற்று நீக்கி முறைமையும் கடினமாக உள்ளது.

அதிலும் கையில் உள்ள ஈரத்தன்மை வாக்குச் சீடை ஈரமாக்குகின்றது. எனவே வேறு முறைமையை ஆராய வேண்டியுள்ளது.

அதேபோல் தேர்தல் ஒத்திகைகள் மீண்டும் நடத்தப்படவுள்ளது. 

எதிர்வரும் 14ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் இந்த தேர்தல் ஒத்திகை இடம்பெறவுள்ளது. அதனை அவதானித்து அடுத்த கட்டமான என்ன செய்வது என்ற தீர்மானத்தை எடுப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08