தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு

08 Jun, 2020 | 10:56 PM
image

மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதுடன், தனியார் பஸ் நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாக இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில்,

தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு,

இணைந்த பயண நேரசூசியொன்றை தயாரிக்கும் பொறுப்பு போக்குவரத்து அமைச்சுக்கு

விபத்துக்களை குறைக்கும் முறைமையொன்றை கண்டறியும் பொறுப்பு பஸ் உரிமையாளர்களுக்கு

இடைத்தரகர்களுக்கு வழங்கும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை

தனியார் பஸ் வண்டிகளுக்கு தனியான நிறம்

மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதுடன், தனியார் பஸ் நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பஸ் வண்டிகளின் பயண நேரசூசி தொடர்பாக இருந்துவரும் நீண்ட கால பிரச்சினையை விரிவாக ஆராய்ந்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியன இணைந்து பயண நேரசூசியொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

அதற்கான தகவல்களை காலம்தாழ்த்தாது ஆராய்ந்து பிரச்சினையை தீர்க்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாளாந்தம் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 07 விபத்து மரணங்கள் சம்பவிப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு தனியார் பஸ்களே பொறுப்பு என்பதும் தெரியவந்துள்ளது. இது பற்றி கூடுதல் கவனம் செலுத்தி விபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களினால் சில தரப்பினருக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் பணம் செலுத்த வேண்டியிருப்பதாக பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர். இது பற்றி மேலும் கேட்டறிந்த ஜனாதிபதி, அத்தகைய கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

போக்குவரத்து சபை பஸ்களுக்கு போன்று தனியார் மற்றும் பாடசாலை பஸ்களுக்கும் தனியான நிறத்தை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொவிட் 19 ஒழிப்பு சுகாதார பிரிவு வழங்கியுள்ள பரிந்துரைகளை பின்பற்றி ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பயணிகள் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறை ஆரம்பமாகும் வேலை நேரங்களை திருத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் சேவையில் ஈடுபடாத காரணத்தினால் பழுதடைந்துள்ள பஸ் வண்டிகளை திருத்துவதற்கு 3 லட்சம் ரூபா கடன் வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பஸ் வண்டிகள் ஓய்வுக்காக நிறுத்தும் சிற்றுண்டிச்சாலைகளின் சுத்தம் பற்றியும் மிகவும் விழிப்பாக இருக்குமாறு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பயணிகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவமளித்து உயர் நியமங்களுடன் கூடிய பஸ் வண்டிகளை போக்குவரத்தில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ. ஜயம்பதி, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷசீ வெல்கம, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைகளின் தலைவர்கள், பஸ் சங்கங்களின் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17