ட்ரம்பும் இராணுவமும் : திட்டமிடாமல் எடுத்த தீர்மானம்

08 Jun, 2020 | 10:31 PM
image

வல்லமை வாய்ந்த ஒரு தலைவராக செயற்படுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி கொண்டிருக்கும் வேட்கை அமெரிக்கத் தளபதிகளும், வாக்காளர்களும், நேச அணிகளும் பதிலளிக்க வேண்டிய அவரசக் கேள்விகளைக் கிளப்புகிறது.

நவீனயுகத்தை அமெரிக்க இராணுவப்படைகள் வடிவமைத்தன; 1940 களில் ஐரோப்பாவில் செய்தது போன்று சில சந்தர்ப்பங்களில் கொடுங்கோண்மை ஆட்சிகளைத் தூக்கியெறிந்து உலகைப் பாதுகாப்பானதாக்கின. வேறு நேரங்களில் வியட்நாம் மற்றும் ஈராக்கில் செய்ததைப் போன்று உலகை மேலும் ஆபத்தானதாக்கியிருக்கிறது. 1960 களின் உள்நாட்டு யுத்தத்தில் இராணுவம் பயங்கரமான, ஆனால் அவசியமான விலை செலுத்தி ஒன்றியத்தைப் பாதுகாத்தது. அதற்குப் பிறகு ஒருசில விதிவிலக்குகள் தவிர அதுவும் பெரும்பாலும் மாநில ஆளுநர்களின் வேண்டுகோளின் பேரில் மாத்திரம் செயற்பட்டதே தவிர அமெரிக்க இராணுவம் உள்நாட்டு அரசியலில் இருந்து தெளிவாக விலகியே இருந்து வந்திருக்கிறது. அமெரிக்கா அதன் இராணுவத்தை ஒரு வெறி ஆர்வத்துடன் கொண்டாடுகிறது. ஆனால் அதன் சட்டங்கள் அமெரிக்காவிற்குள் இராணுவ நடவடிக்கை மீது உறுதியான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. 

இந்த எச்சரிக்கையான அணுகுமுறைக்கு பெருமளவு நல்ல காரணங்கள் இருக்கின்றன. இராணுவச்சட்டத்தினால் உருவமைக்கப்பட்டதாக இருந்தாலென்ன அல்லது கொடுமையான ஆயுதங்களின் சக்தியினூடாக உருவமைக்கப்பட்டதாக இருந்தாலென்ன இராணுவப்படை, அரசியலமைப்பு ஜனநாயகம், உரிமைகள் மற்றும் நீதியுடன் ஒத்திசைவற்றதாகும். போலந்து நாடு அதை 1981 இல் கண்டறிந்தது. சீனாவின் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் 1989 இல் அதனை தியனன்மென் சதுக்கத்தில் கண்டறிந்தார்கள்.

இராணுவச்சட்டம் வழக்கத்திலிருக்கின்ற எகிப்து, துருக்கி, தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் மக்கள் இராணுவ ஆட்சியினால் விளைவது என்ன என்பதை ஏனைய நாடுகளின் மக்களை விடவும் சிறப்பாக அறிவார்கள். பிரிட்டிஷ்காரர்கள் இதுவிடயத்தில் பெருமையாகத் தங்களை நினைத்துவிடக்கூடாது என்பதற்காக  வட அயர்லாந்தை நினைவுபடுத்த விரும்புகிறோம். 1969 இல் வட அயர்லாந்திற்கு பிரிட்டிஷ் துருப்புக்களின் வருகை - குறிப்பாக பெரும் எண்ணிக்கையான மக்கள் கொல்லப்பட்ட கொடூரமான ஞாயிறு (1972) தாக்குதல்களுக்குப் பிறகு - சுமார் 40 வருடகால உள்நாட்டு யுத்தத்திற்கு பெருமளவிற்குக் காரணமாக அமைந்தது.

அமெரிக்க மண்ணில் ஆர்ப்பாட்டக்காரர்களை நசுக்க அமெரிக்க ஆயுதப்படைகளை அனுப்புவதற்கு டொனால்ட் ட்ரம்ப் இப்பொழுது தீவிரமாக ஆர்வப்படுகிறார். தனது அச்சுறுத்தலை அவர் நடைமுறைப்படுத்துவாரா என்பது மினியாபோலிஸ் நகரில் ஜோர்ஜ் ப்ளொய்டை பொலிஸ் அதிகாரி கொலை செய்த சம்பவத்தையடுத்து அமெரிக்க நகரங்களில் மூண்ட கலவரங்களின் மட்டம் ஒரே விதமாகத் தொடருமா இல்லையா என்பதைப் பொறுத்தது.உலகளாவிய ஆர்ப்பாட்டங்களின் உச்சநிலை இப்போது கடந்து விட்டிருக்கக்கூடும் என்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன. ஆனால் ட்ரம்ப் ஆத்திரமூட்டும் வேலைகளில் ஈடுபடுகிறார். கொவிட் - 19 தொற்றுநோயை அவர் தவறாக கையாண்டதனால் பெரிதும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இரண்டாவது பதவிக்கால பிரசாரத்திற்கு அமெரிக்காவின் இனப்பிளவுகள் உதவக்கூடும் என்று அவர் நினைக்கிறார். எதையும் நடக்காது என்று இந்த ஜனாதிபதியை வைத்துக்கொண்டு கூறிவிடமுடியாது. 

வொஷிங்டனில் கடந்தவாரம் தான் என்ன செய்யக்கூடும் என்பது பற்றிய ஒரு முன்னறிகுறியை ட்ரம்ப் அமெரிக்கர்களுக்குக் காண்பித்திருக்கிறார். ஏனென்றால் ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் கொலம்பியா மாவட்டத்தில் அவருக்குக் கூடுதல் அதிகாரங்கள் இருக்கின்றன. இராணுவ பொலிஸை, 82 ஆவது ஆகாய மார்க்கத்தாக்குதல் படைப்பிரிவு, இராணுவத்தின் கறுப்பு ஹெலிகொப்டர் பிரிவு ஆகியவற்றை தலைநகரில் படைப்பலத்தைக் காண்பிக்கும் ஒரு நடவடிக்கையாகக் குவித்திருக்கிறார்.

ஆர்ப்பாட்டங்களில் பெரும்பாலானவை அமைதி வழியிலானவையாக இருக்கின்ற போதிலும், தற்போதைய அமைதியின்மையை உள்நாட்டுப் பயங்கரவாதம் என்று வர்ணத்திருக்கும் அவர் ஆயிரமாயிரம் படைவீரர்களைப் பயன்படுத்தப்போவதாக உறுதியளித்திருக்கிறார். அவரது படைகள் வெள்ளை மாளிகைக்கு வெளியே அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வதவர்களை அப்புறப்படுத்துவதற்கு கண்ணீர்புகைப் பிரயோகம் செய்தனர். பின்னர் கூட்டுப்படைகளின் பிரதம தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மிலே சகிதம் நின்றுகொண்டு, பைபிளை உயர்த்திக் காட்டியவாறு புகைப்படத்திற்குப் பாவனை செய்தார். 

ட்ரம்பின் இத்தகைய போக்குகள் இராணுவத்திற்குள்ளும், அதற்கு அப்பாலும் ஒரு அரிதான அரசியல் எதிர்ப்புணர்வைத் தோற்றுவிக்கின்ற அளவிற்கு அதிர்ச்சியைத் தந்திருக்கின்றன. அமெரிக்க நகரங்களை போர்க்களங்கள் என்று முன்னர் வர்ணித்த பாதுகாப்பு அமைச்சர் மார்க்ஸ் எஸ்பர், படைப்பலத்தைப் பிரயோகிப்பதிலிருந்து பின்வாங்கினார்.

அவருக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜேம்ஸ் மெற்றிஸ் தனது வாழ்நாளில் தான்கண்ட ஜனாதிபதிகளில் ஐக்கியத்தில் அக்கறைப்படாமல் பிளவை ஏற்படுத்துகிற முதல் ஜனாதிபதி ட்ரம்ப் என்று சொன்னார். 'உயர்வான நோக்கத்திற்காக' ஒரு 'கட்டுப்பாடான கீழ்ப்படியாமையைக்கு' மூன்று வருடங்களுக்கு முன் ஆதரவை வெளிப்படுத்திய ஜெனரல் மிலே சமத்துவம், பேச்சுச்சுதந்திரம், கண்ணியத்திற்கான உரிமை ஆகியவற்றை உறுதியாக கடைப்பிடிப்பதற்கான உத்தரவொன்றைப் பிறப்பித்தார். கடந்த காலத்தில் ட்ரம்பின் உதவியாளர்கள் வெட்கக்கேடான முறையில் மௌனமாக இருந்தார்கள். இப்போது அவர்கள் வெளிக்காட்டுகிற பிரதிபலிப்பு ஒரு நீண்ட தாமதத்திற்குப் பின்னர் வெளிக்காட்டுகிற மாற்றத்தைக் குறிதது நிற்கறது எனலாம்.

இராணுவ ரீதியிலும், அரசியல் ரீதியிலும் வல்லமை பொருந்திய தலைவர்கள் பற்றி ட்ரம்ப் ஒரு மருட்சியைக் கொண்டிருக்கிறார். சி ஜின்பிங், விளாடிமிர் புட்டின், கிம் ஜொங் - உன் மற்றும் ரொட்றிகோ டுட்ரேட் போன்ற எதேச்சதிகாரிகளுக்கு ஆதரவாக செயற்பட்டிருக்கிறார். தியனென்மென் அடக்குமுறையை  அவர் ஆதரித்தார். வழமைக்கு மாறான முறையில் சென்று வன்முற  ஆர்வம் கொண்ட இராணுவ அதிகாரிகளைப் பாராட்டுகிறார்.

இராணுவசேவையில் இணைந்து பணியாற்றுவதைத் தான் தவிர்த்த போதிலும்கூட அவருக்கு படைகள் பற்றி ஈர்ப்பு இருக்கிறது. வைரஸ் தொற்றுநோய் பரவத்தொடங்கிய ஆரம்பகட்டத்தில் சமூக இடைவெளிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஆயுதபாணி இயக்கத்தவர்களை அவர் ஊக்கப்படுத்தினார். தனது அரசியல் அனுகூலத்திற்காகத் தனது சொந்த மக்களைக் கொலை செய்வதில் நாட்டம் காட்டும் ஜனாதிபதியாக அவர் இருப்பது நம்பமுடியாததாகத் தோன்றலாம். ஆனால் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இராணுவ அதிகாரிகளும், குடியரசுக்கட்சி வேட்பாளர்களும், வாக்காளர்களும், வெளிநாட்டு அரசாங்கங்களும் எந்தப் பக்கத்தில் நிற்பது என்பது குறித்துத் தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

(த கார்டியன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22