அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய அறிவித்தல்!

Published By: Digital Desk 3

08 Jun, 2020 | 09:02 PM
image

பொதுத்தேர்தலில் எந்த அரசியல் கட்சி சார்பாகவும் செயற்படக்கூடாது என அரச நிறுவன தலைவர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அரச கூட்டுத்தாபனம் மற்றும் சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையிலுள்ள எவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது எந்தவொரு அரசியல் கட்சிக்காக செயற்படவோ, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவோ கூடாது என ஜனாதிபதி மேலும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிடுககையில்,

எந்தவொரு அரச நிறுவனத்தினதும் தலைவருக்கு, பணிப்பாளர் சபை உறுப்பினருக்கு அல்லது வேறு அதிகாரி ஒருவருக்கு ஏதேனும் ஒரு கட்சிக்காக அரசியலில் ஈடுபடவேண்டிய தேவையிருந்தால் சட்ட ரீதியாக தனது பதவியிலிருந்து விலகி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியும். 

ஆனால்  அரச நிறுவன தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அரசாங்கத்திற்காக அரசியல் செய்ய வேண்டும் என நான்  ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. 

அவர்கள் செய்ய வேண்டியது தமது பொறுப்பில் உள்ள நிறுவனங்களை வினைத்திறனாகவும், ஊழல் மோசடிகள் இன்றியும், பயனுறுதியும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும் கொண்ட இலாபமீட்டும் நிறுவனங்களாக முன்னேற்றுவதாகும்.

அரச நிறுவனங்கள் பொதுமக்கள் பணத்திலேயே இயங்குகின்றன. எனவே அவை எந்த வகையிலும் பொதுமக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது. 

அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகள் ஆகிய அரச நிறுவனங்களிடம் உள்ள வாகனங்கள், உபகரணங்கள் போன்ற பௌதீக வளங்கள் அல்லது நிதி வளங்களை எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்காகவோ அல்லது அரசியல் பணிகளுக்கோ பயன்படுத்தக் கூடாது.

இந்த உத்தரவுகளை மீறும் அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40