(எஸ்.ரவிசான்)

தேசிய அரசாங்கத்தினால் அதிகரிப்பட்ட வற் வரியினால் மக்கள்  பாதிப்படைந்துள்ள நிலையினால் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வற் வரியில் திருத்தத்தை கொண்டுவர எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

நாட்டின் அரச வருமானமானது 1993 இலிருந்து 2015 வரை தொடர்ச்சியாக குறைவடைந்து வந்துள்ளதாகவும் அவர்  இதன் போது சுட்டிகாட்டினார். 

ஸ்ரீ லங்கா சுத்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பதில் நிதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

நாட்டின் கடன்சுமையிலிருந்து மீளும் வகையில் அன்மையில் தேசிய அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள வற் வரியினால் சாதாரண மக்கள் அன்றாடம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். 

இதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வற் வரியில் திருத்தத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியினால் குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  அந்த குழு அறிக்கையினை சமர்ப்பித்த பின்னர் விரைவில் வற் வரியில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றார்.