அமெரிக்காவில் அரங்கேறிய மற்றுமொரு பொலிசாரின் மிருகத்தனமான செயல் : ஜோர்ஜ் புளொய்டை அடுத்து 75 முதியவர்

Published By: Digital Desk 3

07 Jun, 2020 | 04:34 PM
image

அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்ட் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் முதியவர் ஒருவரை பொலிஸார் கண்மூடித்தனமாக கீழே தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து முதியவரை கீழே தள்ளிய பொலிஸார் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ப்ளொய்ட்  (46) என்பவரை கடந்த மே 25ம் திகதி மினேபொலிஸ் காவல்துறை அதிகாரி ஒருவர் கழுத்தின் மீது தன் முழங்காலால் அழுத்தினார். மூச்சுவிடத் திணறிய ப்ளொய்ட் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த படுகொலைக்கு நீதி கோரியும், கறுப்பினத்தவருக்கு எதிரான துவேஷத்தை எதிர்த்து, மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் அத்துமீறும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி, போராட்டக்காரர்களை கொந்தளிக்கச் செய்து வருகின்றன.

நியூயோர்க்கில் உள்ள புபலோ நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவை அமுல்படுத்த நூற்றுக்கணக்கான பொலிஸார் அணிவகுத்தனர்.

அப்போது அங்கு வந்த 75 வயது மதிக்கத்தக்க வெள்ளை இன முதியவரை, பொலிஸார் கீழே தள்ளினர்.

நிலைகுலைந்து விழுந்த முதியவர் தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்தபோதும், அவருக்கு உதவாமல் பொலிஸார் கடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது. இந்த வீடியோ ஆர்ப்பாட்டகாரர்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.

பொலிஸாரால் கீழே தள்ளப்பட்ட முதியவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், முதியவரைக் கீழே தள்ளிய இரண்டு பொலிஸார் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக புபலோ நகர மேயர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17