ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக பிரித்தானியாவில் 'பிறிக்ஸிட்' வாக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு பிற்பாடு பிரான்ஸின் காலெயிஸ் துறைமுகத்தில் பாதுகாப்பு வேலிக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிரான்ஸ் கொடி பிரித்தானியாவின் ஐக்கிய கொடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நட்சத்திர சின்னங்கள் என்பவற்றைக் காண்பிக்கும் 4 பாரிய கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு அடையாளப் பலகைகள் அகற்றப்பட்டு புற்றரையில் கைவிடப்பட்டுள்ளது. 

12 அடி நீளமும் 9 அடி அகலமும் கொண்ட அந்தப் பலகைகள் பிரான்ஸிலிருந்து வெளியேறும் மோட்டார் வாகன சாரதிகளுக்கு அவர்களது கடவுச்சீட்டுகள் பரிசோதிக்கப்படும் வெவ்வேறு பாதைகளுக்கு வழிகாட்டுவதாக உள்ளது. 

இந்நிலையில் அந்தப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளமையானது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியதற்கு பின்னர் பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவை நோக்கிச் செல்லும் குடியேற்றவாசிகளுக்கான எல்லை பரிசோதனைகள் குழப்பமடைந்துள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேற்படி கடவுச்சீட்டு வழிகாட்டல் பலகைகள் துறைமுகத்தின் கடவுச்சீட்டு பரிசோதனை நிலையப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டு அதற்கு 100 யார் தொலைவில் புற்றரையில் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.