இன்று ஒத்திகை இடம்பெற்ற நிலையில் நாளை கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: Digital Desk 3

07 Jun, 2020 | 04:11 PM
image

(ஆர்.யசி)

பொதுத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கவும், தேர்தலுக்கான அடுத்தகட்ட ஆயத்தங்கள் குறித்து ஆராயவும் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் ஆணைக்குழு கூடுகின்றது.

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் இந்த வார இறுதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும், எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் அடுத்ததாக தேர்தல் திகதி குறித்து அறிவிப்பை சகல தரப்பும் எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு கூடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட போதிலும் கூட தேர்தல் திகதி குறித்து எந்தவித தீர்மானமும் எடுக்க முடியாது போயுள்ளது.

இந்நிலையில் நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடுகின்றது. தேர்தல்கள் திணைக்களத்தில்  இடம்பெறும் இந்த கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது திணைக்கள அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடத்தப்படவுள்ளது.

இதன்போது சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகள், முன்மொழிவுகள் குறித்தும் அவற்றை கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.

குறிப்பாக தேர்தல் பிரசாரங்களை கட்சிகள் மற்றும் குழுக்கள் முன்னெடுக்கும் போது மக்களை அவர்கள் தொடர்புகொள்ளும் போதும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படுவது சாத்தியமா, ஊடகங்கள் சகல வேட்பாளர்களுக்கும் முன்னுரிமை வழங்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அவை குறித்தும் கலந்துரையாடவுள்ளனர்.

மேலும் விருப்பு இலக்கம் வழங்கப்படுவது, தபால்மூல வாக்களிப்பு திகதி தீர்மைப்பு குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறுகின்றது.

இந்நிலையில் இந்த வாரம் இறுதிக்குள் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகள் கோவையை சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும் கையளிக்கவும் தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27