பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைப்போம் - ரோஹித அபே குணவர்தன

Published By: Digital Desk 3

07 Jun, 2020 | 02:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை  அமைக்க வேண்டிய  தேவை  ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுனவிற்கு  கிடையாது. பொதுத்தேர்தலில்   மூன்றில் இரண்டிற்கும்  அதிகமான பெரும்பான்மை ஆதரவினை பெற்று தனித்து பலமான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்போம். என   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ரோஹித  அபேகுணவர்தன தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய  தேசிய  கட்சிக்கும்,  ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான  உள்ளக பிரச்சினை  தற்போது தீவிரமடைந்துள்ளது.  நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய  தேசிய கட்சியின்  தலைவர் ரணில்  விக்ரமசிங்க தனது கட்சியின் உள்ளக  பிரச்சினைகளுக்கு மாததிரம் முக்கியத்துவம் கொடுத்தார் . நாட்டின் தேசிய  பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின்   வீழ்ச்சிக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பொறுப்பு  கூற வேண்டும்.  கட்சியை  பிளவுப்படுத்தி  தனது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்தமையினால்  இரு தரப்பினருக்குமிடையில் முரண்பாடு தீவிரமடைந்துள்ளது.   

பொதுத்தேர்தலை தொடர்ந்து ஐக்கிய  தேசிய கட்சியினர் பொதுஜன பெரமுனவுடன் தேசிய அரசாங்கத்தை அமைக்க  உள்ளாதால்  முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க   அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகிறார் . என்று    சஜித் அணியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு   வெறுப்புக்குரியது.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து  தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை கிடையாது.  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டுக்கும்  அதிகமாக ஆதரவை பெற்று  பிற கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தனித்து பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும். ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப் பெற்ற  மக்களாணைக்கு அதிகமாகவே பொதுத்தேர்தலிலும்  அமோக ஆதரவு கிடைக்கப் பெறும்.

பொதுத்தேர்தலின் ஊடாக மக்கள்  ஐக்கிய  தேசிய கட்சியையும்,ஐக்கிய  மக்கள் சக்தியையும் முழுமையாக புறக்கணிப்பார்கள்.  ஐக்கிய  தேசிய கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள்  பலர்  பொதுஜன பெரமுனவில் இணைந்துக் கொண்டுள்ளார்கள்.  ஐக்கிய தேசிய கட்சிக்கு இனியொருபோதும்  மக்களாணையினை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாது. என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51