அல்ஹுசைன் தெரிவித்துள்ள விடயங்கள்  குறித்து அரசாங்கம் கவனம்  செலுத்தவேண்டும்   

Published By: Ponmalar

30 Jun, 2016 | 05:53 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டின் மனித உரிமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் ஆணையாளர் தெரிவித்திருக்கும் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். அரசாங்கம் இதுதொடர்பில் உடனடி தீர்மானங்கள் எடுக்காமல் இருப்பதானது சர்வதேசத்தின் நம்பிக்கையை இழக்கநேரிடும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

நவ சமசமாஜ கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அதன் ஆணையாளர் செய்யித் அல் அல்ஹுசைன் தெரிவித்துள்ள விடயங்கள் 

குறித்து அரசாங்கம் கவனம்  செலுத்தவேண்டும்   சைன், இலங்கை அரசாங்கம் நாட்டில் சில முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டாலும் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லையென தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் ஆணையாளரின் இந்த குற்றச்சாட்டை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். ஏனெனில் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து ஒருவருடம் கடந்தும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வை இன்னும் பெற்றுக்கொடுக்கவில்லை. அத்துடன் ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட, சிவராம் போன்றவர்களின் கொலை தொடர்பில் விசாரணைகள் முடிவடையவில்லை.

மேலும் வடக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காணிப்பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அவர்களின் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் மந்த கதியிலேயே இடம்பெறுகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்ந்து தாமதமாகிக்கொண்டு செல்கின்றது.

எனவே அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதி அளித்த விடயங்களை அப்படியே நிறைவேற்றுவதன் மூலமே சர்வதேசத்தின் உதவியை தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09