சுகாதாரத் துறையுடன் முக்கிய சந்திப்பை மேற்கொள்ளவுள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: Digital Desk 3

06 Jun, 2020 | 03:36 PM
image

(ஆர்.ராம்)

9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் திகதியை தீர்மானம் செய்வதற்காக எதிர்வரும் திங்களன்று தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது. இந்தக் கலந்துரையாடலுக்கு முன்னதாக சுகாதார துறையினருடன் முக்கிய கலந்துரையாடலொன்றிலும் பங்கேற்கவுள்ளது. தேர்தலை நடத்துவதற்குரிய உகந்த நிலைமைகள் காணப்படுகின்றமையை உறுதிசெய்வது பற்றியும், தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய மேலதிக பாதுகாப்பு முறைகள் பற்றியும் விரிவாக இதன்போது பேசப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

இந்தச்சந்திப்பில் சுகாதாரதுறையினரின் கொரோனா பாதுகாப்பு தொடர்பிலான உத்தரவாதங்களையும் ஆணைக்குழு உறுப்பினர்கள் கோரவுள்ளதாக அறியமுடிகின்றது. இதேவேளை, நாளை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாக்களிப்பு ஒத்திகையை தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவும் 200 வாக்காளர்களை மையப்படுத்தியதாகவும் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பை முன்னெடுப்பது தொடர்பில் இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் இந்த ஒத்திகையின் அனுபவத்துடன் நாளை மறுதினம் திங்கட்கிழமை திங்கட்கிழமை பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள்ரூபவ் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கநெறிக்கோவை, ஊடக வழிகாட்டி நெறிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 104 ஆ. (5) (அ) உப உறுப்புரையின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் ஊடக வழிகாட்டியை தயாரித்துள்ளதோடுரூபவ் 2009 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்கரூபவ் பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தினால் திருத்தியமைக்கப்பட்ட 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 8 (8) ஆம் உட்பிரிவுக்கு அமைய அரசியல்கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான ஒழுக்க நெறிக்கோவையும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலானது நேற்று முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை செல்லுபடியாகும் என்பதோடு இதில் குறித்துரைக்கப்பட்ட நெறிமுறைகளும் அக்காலம் வரையில்செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தல் தொடர்பான மற்றுமொரு வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27