கொரோனா தொற்று இல்லாத நாடாக பிஜி தீவு

Published By: Digital Desk 3

05 Jun, 2020 | 05:24 PM
image

பிஜித் தீவில் கடைசியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரும் பூரண குணமடைந்த நிலையில், அத்தீவில் கொரோனா தொற்று இல்லையென நேற்று அறிவித்துள்ளது.

பசுபிக் சமுத்திரத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் மகத்தான வெற்றியினை பிஜி ஈட்டியுள்ளது.

கடைசியாக அறியப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளி பூரண குணமடைந்த நிலையில், நாட்டின் வைரஸ் இல்லாத அந்தஸ்த்திற்கு " பிரார்த்தனைகளுக்கான பலன், கடின உழைப்பு மற்றும்  அறிவியலின் உறுதிப்படுத்தல்"  ஆகியவையே காரணம் என பிஜி பிரதமர் பிராங்க் பைனிமராமா தெரிவித்துள்ளார்.

சுமார் 930,000 சனத் தொகையை கொண்ட பிஜியில் மார்ச் மாதம் நடுப்பகுதியில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.

இந்நிலையில் இதுவரை 18 பேர் கொவிட்19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், கடந்த 45 நாட்களில் நாட்டில் புதிய தொற்று அல்லது இறப்பு வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

உலகளவில் பொரோனா வைரஸ் தொற்றினால் 66 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் 391,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47