அமெரிக்க தூதரக இராஜதந்திரி விவகாரமும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவரின் விளக்கமும்

04 Jun, 2020 | 08:12 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொரோனா தொடர்பில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர்.  பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளார். 

இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர் இவ்வாறு நடடுக்குள் பிரவேசித்துள்ளதாக அறிய முடிகின்றது. 

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் வருகை தந்த இராஜதந்திர அதிகாரியே இவ்வாறு  நாட்டுக்குள் உள் நுழைந்துள்ளார்.

இராஜதந்திர சிறப்புரிமையின் கீழ் பரிசோதனையை மேற்கொள்ளாது அவர் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவர் ரஜிவ் சூரியஆராச்சி  தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தமது இராஜதந்திர பணியாளர்கள் இலங்கைக்கு வருகைதரும் போது, இராஜதந்திர உறவுகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாடுகள், தரங்கள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

 இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவர் ரஜிவ் சூரியஆராச்சி,

 குறித்த இராஜதந்திர அதிகாரி தூதரக மட்டத்தில் சுய தனிமைப்டுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பின்னர் அங்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் அறிக்கை இரகசிய ஆவணமாக வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்படலாம் எனவும், இராஜ தந்திரிகள் விடயத்தில் அவ்வாறான அணுகு முறை ஒன்று உள்ளதாகவும்  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08