நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவே ஜனாதிபதி செயலணி : மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும்

Published By: J.G.Stephan

04 Jun, 2020 | 05:31 PM
image

(ஆர்.யசி)

போதைப்பொருள் கடத்தலை தடுக்க முன்னைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தும் அது வெற்றியளிக்கவில்லை. நாட்டின் சகல மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது என்கிறது அரசாங்கம். எவரும் இனி கப்பம் பெறவோ, குற்றங்களில் ஈடுபடவோ முடியாது எனவும் கூறுகின்றது.



அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 நெருக்கடியில் இருந்து நாட்டினையும்  மக்களையும் ஜனாதிபதி மீட்டதை போலவே இந்த நாட்டில் பாதாள கோஷ்டிகளின் அட்டூழியங்கள், போதைப்பொருள் கடத்தல் காரர்களின் மூலமாக நாடு நாசமாவதை தடுக்கும் விதத்தில் ஜனாதிபதி செயலணியை உருவாக்கியுள்ளார்.

இந்த நாட்டில் கப்பம் பெற்று மக்களை அச்சுறுத்தி, அப்பாவி மக்களின் செயற்பாடுகளில் தலையிடும் நபர்களின் தொல்லைகளில் இருந்து சகல மக்களையும் பாதுகாக்கவே இந்த செயலணி இயங்கும்.

அதேபோல் சிறைச்சாலைகளில் நடக்கும் மோசமான செயற்பாடுகள் அனைத்தையும் தடுக்க வேண்டும். போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்தும் அதனை தடுக்க முடியாது போய்விட்டது.

எனவே தான் இந்த செயலணி முழுமையாக பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டினை தூய்மையான, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் சகல மக்களும் வாழக்கூடிய நாடாக மாற்றியமைக்கவே ஜனாதிபதி இந்த செயலணியை உருவாக்கியுள்ளார்.

இதில் குற்றங்கள் நடந்தால் பொலிஸ் அதனை கையாள்வார்கள். அப்பாவி பொதுமகன் ஒருவர் குற்றவாளிகளின் மூலமாக பாதிக்கப்பட்டால் அதனை பொலிஸ் கருத்தில் கொள்ளவில்லை என்றால் அடுத்ததாக பொலிசாருக்கு மேல் அதிகாரத்திற்கு கொண்டுசெல்ல முடியும்.

அதற்கு இந்த செயலணி துணையாக இருக்கும். சகல மக்களும் எந்தவித அச்சமும் இல்லாது செயற்பட உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலணிக்கு சகல பொதுமக்களினதும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13