ஜோர்ஜ் புளொய்ட்டுக்கு கொரோனா - பிரேத பரிசோதனையில் உறுதி

Published By: Digital Desk 3

04 Jun, 2020 | 09:18 PM
image

அமெரிக்காவில் வெள்ளையின பொலிஸாரினால் கொலைசெய்யப்பட்ட கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் புளொய்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் திங்கட்கிழமை 20 பக்கம் கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கையை குடும்பத்தாரின் அனுமதியுடன் வெளியிட்டது.

அதில், பொலிஸாரினால் தாக்குதலினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், அது ஒரு கொலை எனுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னசொட்டா மாநிலத்தை சேர்ந்த கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் புளொய்ட், வெள்ளையின பொலிஸ் ஒருவர் கால் முட்டியால் கழுத்தை நெரித்ததில் “என்னால் சுவாசிக்க முடியவில்லை“ எனக் கூறி உயிரிழந்தார்.

அவரது மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு நகரங்களிலும் 9 ஆவது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஊரடங்கை மீறியும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி நீதி கேட்டு போராடி வருகின்றனர்.

வொஷிங்டனில் பெரும்பாலும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனிடையே  கொல்லப்படுவதற்கு முன் ஏப்ரல் மாதம் ஜோர்ஜ் புளொய்ட் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஹென்னபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் வெளியிட்ட பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா நோய்த்தொற்றுக்கும் அவரது மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நீடித்து வரும் போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவற்றுள் கால்வாசிக்கும் மேற்பட்டோர் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், நியூயோர்க், டல்லாஸ், பிலடெல்பியா ஆகியவை பகுதிகளிலும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52