இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை ஒருபோதும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை என தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குற்றம் நிரூபிக்கப்படாமல் எவ்வாறு ஆளுநர் பதவியிலிருந்து நீக்குவது எனவும் கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விவ­காரம் தொடர்பில் பல அலகுகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சி காலத்தில் மத்திய வங்கியில் காணப்பட்ட முரண்பாடுகள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

இதேவேளை பிணை முறி விவ­காரம் தொடர்பில் ஆராய மூன்று சட்டத்தரணிகள் அடங்கிய குழு கடந்த வருடம் நியமிக்கப்பட்டது. குறித்த குழுவால் தவறுகள் அடையாளம் காணப்பட்டிருக்குமாயின் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.

பொலிஸார் விசாரணை செய்த போதும் அர்ஜுன மகேந்திரன் மீது எவ்வித குற்றமும் இனம்காணப்படவில்லை.

இவ்வாறான ஒரு நிலையில் அர்ஜுன மகேந்திரனை பதவி விலக்க முடியாது.