தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்

Published By: Digital Desk 3

04 Jun, 2020 | 11:03 AM
image

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரட்ணஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாக்கப்பட்டிருக்கின்றன. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு தேவையற்ற அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் பிரயோகிப்பது ஆரோக்கியமானதல்ல. எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அவர் இதுவரையில் அடிபணியாமல், நேர்மையாக தமது கருத்துக்களை முன்வைப்பது வரவேற்கத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான ஹூல் மீது, வீணான அபாண்டங்களையும் பொய்யான, சோடிக்கப்பட்ட அவதூறுகளையும் பரப்பி வருவது, ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்புடையதல்ல.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வந்த அவரது மகள், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாக, சுகாதாரப் பணிப்பாளரும் இராணுவத் தளபதியும் சான்றிதழ் வழங்கியுள்ள நிலையிலும், அவரது தந்தையான ஹூலை 21 நாட்கள் தனிமைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதுமாத்திரமின்றி, “பேராசியர் ஹூல் பக்கச்சார்பாக செயற்படுகின்றார்” என்றும் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், அவரை இலக்குவைத்து, தனிப்பட்ட ரீதியில் அழுத்தங்களை மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரை, சுதந்திரமாக இயங்க இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47