இறுதியாக அடையாளம் காணப்பட்ட 66 கொரோனா தொற்றாளர்களில் 31 பேர் கடற்படையினர் : ஏனையோர் குறித்த விபரம் இதோ !

Published By: J.G.Stephan

04 Jun, 2020 | 07:38 AM
image

இலங்கையில், இறுதியாக 66 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,749 ஆக அதிகரித்துள்ளது. 

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 66 கொரோனா தொற்றாளர்களில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 31 கடற்படை வீரர்களும், கட்டாரிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 19 பேரும், பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரும், குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 02 பேருமே என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 



கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 836 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 902 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 66  பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் இடம்பெற்றால்தான் பொருளாதார...

2024-03-29 15:38:29
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37