3 முக்கிய தொழில்துறைகளில் சீனா - இலங்கை ஒன்றிணைதல் தொடர்பில் ஆராய்வு

03 Jun, 2020 | 08:21 PM
image

(நா.தனுஜா)

அண்மைக்காலங்களில் இலங்கையின் பல்வேறு தொழிற்துறைகளின் தலைவர்களுடனும் சந்திப்பை நிகழ்த்திவரும் சீனத்தூதரக அதிகாரிகள், அந்தந்தத் துறைகளில் இருநாடுகளும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வழிவகைகள் குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

அதன்படி இலங்கையிலுள்ள சீனத்தூதரக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஹு வே நேற்று  செவ்வாய்கிழமை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன், இலங்கை மின்சாரசபையின் தலைவர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை தேயிலைச்சபையின் தலைவர் ஜயம்பதி மொலிகொட ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இச்சந்திப்பின் போது ஏற்கனவே சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் உடன்பட்டிருந்த நிதி, சக்திவலு மற்றும் தேயிலை உற்பத்தித்துறைகளில் ஒன்றிணைந்து பணியாற்றுவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று இன்று புதன்கிழமை கல்வியமைச்சர் பந்துல குணவர்தனை சந்தித்த ஹு வே, பல்கலைக்கழகங்களுக்கு இடையில் பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்குதல், தகவல்தொழில்நுட்பத்துறை, தொழிற்பயிற்சி மற்றும் தொலைதூரக்கல்வி ஆகிய பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

அத்தோடு இலங்கையிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களினதும் பயன்பாட்டிற்கென சீனத்தூதரகத்தினால் 50,000 முகக்கவசங்களும் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி...

2024-04-18 16:36:22