பொதுத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்க இன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: J.G.Stephan

03 Jun, 2020 | 08:34 AM
image

(ஆர்.யசி)


நீதிமன்ற தீர்ப்பினையடுத்து பொதுத் தேர்தலுக்கான திகதியை ஆராய இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு கூடுகின்றது. தேர்தலை நடத்துவது குறித்து  சுகாதார அதிகாரிகளின் சான்றிதழ் வழங்கப்பட்டதில் இருந்து 70 நாட்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ள நிலையில்  ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டெம்பர் முதல் வாரத்தில் தேர்தலை நடத்த முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறுகின்றது.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க நீதிமன்ற தீர்ப்பு வரவேண்டும் என தொடர்ச்சியாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்து வந்த நிலையில் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும், எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிலையில் அவற்றை தள்ளுபடி செய்வதாக  உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பினை அறிவித்ததை அடுத்து தேர்தல் திகதி மற்றும் தேர்தலை நடத்தினால் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆராய இன்று தேர்தல்கள் ஆணைக்குழு கூடுகின்றது.



மஹிந்த தேசப்பிரிய
இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகையில், தேர்தலை நடத்துவது குறித்து பல காரணிகளை ஆராய வேண்டியுள்ளது. இதில் தேர்தல் திகதி குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும். எவ்வாறு இருப்பினும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்பதை உறுதியாக கூறிவிட்டோம். நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னரே தேர்தல் திகதி குறித்து ஆராயப்படும் எனவும் கூறியுள்ளோம். இப்போது தீர்ப்பு வந்துள்ள காரணத்தினால் அடுத்ததாக திகதி குறித்து தீர்மானம் எடுக்கப்படும். எவ்வாறு இருப்பினும் தேர்தலை நடத்த 60 தொடக்கம் 70 நாட்கள் தேவைப்படும். அதற்கமைய பார்த்தல் ஆகஸ்ட் மாதம் இறுதி அல்லது செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்தலை நடத்த முடியும். அதேபோல் இம்முறை தேர்தலை நடத்த வழமையை விடவும் அதிகமான நிதி தேவைப்படுகின்றது. எவ்வளவு நிதி தேவைப்பட்டாலும் அதனை அரசாங்கம் வழங்க வேண்டும். திறைசேரியில் அதற்கான நிதி ஒதுக்கித்தரப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

மேலும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகள் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை ஆணைக்குழு ஆராய வேண்டும். பொதுத் தேர்தலை நடத்துவதென்றால் முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும். சமூக இடைவெளியை கையாண்டு மக்கள் வாக்களிப்பது மட்டுமல்ல தேர்தல் பிரசாரங்களை செய்யும் போதும் சமூக இடைவெளியை கையாள வேண்டும். இந்த தேர்தல் மட்டும் அல்ல அடுத்து நடத்த வேண்டிய மாகாணசபை தேர்தலையும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே நடத்த வேண்டும். ஏனெனில் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் 2021 ஆம் ஆண்டு இறுதிவரை இருக்கும் என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே இந்த காரணிகள் குறித்து ஆராய வேண்டும் எனவே இந்த விடயங்கள் குறித்தெல்லாம் ஆணைக்குழு கலந்துரையாடவுள்ளது என்றார்.

பேராசிரியர் ரதன்ஜீவன் ஹூல்
இது குறித்து ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரதன்ஜீவன் ஹூல் கூறுகையில், நேற்றைய தினமும் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி சில முக்கிய காரணிகள் குறித்து ஆராய்ந்தது. தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடுதல் குறித்தும் சுகாதார நடவடிக்கைகளை கையாள்தல் குறித்தும் ஆராயப்பட்டது.



இன்றைய தினம் காலையில் மீண்டும் தேர்தல்கள் ஆணைக்குழு கூடுகின்றது. தேர்தல் நடத்துவதற்கான திகதி குறித்து இன்றைய தினம் ஆராயப்படும். எவ்வாறு இருப்பினும் இந்த வைரஸ் தொற்றுநோய் பரவல் முடிவுக்கு வந்துவிட்டது என சுகாதார அதிகாரிகள் எமக்கு சான்றிதழ் ஒன்றினை வழங்கியதில்  இருந்து 60 அல்லது 70 நாட்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் என நாம் தெரிவித்துள்ளோம். அத்துடன் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் எம்மால் திகதியை தீர்மானிக்க முடியாத நிலைமை இருந்தது. இப்போது அந்த சிக்கல் இல்லாத காரணத்தினால் இன்றைய தினம் ஆணைக்குழு கூடி மேற்கூறிய விடயங்கள்  குறித்து ஆராயப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13