பொதுத்தேர்தலை பிற்போட எதிர்த்தரப்பினர் எடுத்த முயற்சிகள் ஜனநாயக ரீதியில் தோற்கடிப்பு - பிரசன்ன ரணதுங்க

02 Jun, 2020 | 07:46 PM
image

(இராஜதுரைஷாஹன்)

பொதுத்தேர்தலை    பாதுகாப்பான  முறையில் நடத்துவதற்கு  தடைகள் ஏதும் இனி கிடையாது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக  ஜனநாயகம்  பாதுகாக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு ஓரிரு வாரங்களில் தனது கடமையினை  முழுமைப்படுத்தும் என்ற  நம்பிக்கை காணப்படுகின்றது என  சுற்றுலாத்துறை மற்றும்  சிவில்  விமான சேவைகள் அமைச்சர்  பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

 

ஜனாதிபதி பாராளுமன்றத்தை  கலைத்தல் மற்றும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்ய த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதன்  பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர்  மேற்கண்டவா று  குறிப்பிட்டார்..

பொதுத்தேர்தலை  தொடர்ந்து பிற்போடுவதற்கு  எதிர் தரப்பினர் முன்னெடுத்த முயற்சிகள் ஜனநாயக முறையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கொவிட்-  19 வைரஸ்  பரவலை காரணம் காட்டி இவர்கள் தங்களின்  கட்சி உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்தார்கள். நெருக்கடியான முறையில்  தேர்தலை நடத்த  வேண்டும்  என்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல.

நீதிமன்றத்திக் தீர்ப்பினை தொடர்ந்து பொதுத்தேர்தலை விரைவாக நடத்தும் நடவடிக்கையினை தேர்தல் ஆணைக்கு எடுக்க வேண்டும்.  இன்னும் ஓரிரு வாரங்களில்  தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தும் என்ற  நம்பிக்கை  காணப்படுகின்றது.

பொதுத்தேர்தலை     பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கு இனி தடையேதும் கிடையாது. தேர்தலை  நடத்துலதற்கு  தேர்தல் ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் உரிய ஒத்துழைப்பினை  வழங்கும். எந்நிலையிலும் சுகாதார தரப்பினரது  அறிவுறுத்தல்களை  அலட்சியப்படுத்த இடமளிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58