மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை நீதிமன்றத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளது : செஹான் சேமசிங்க

Published By: J.G.Stephan

02 Jun, 2020 | 06:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மக்களின்  அடிப்படை ஜனநாயக உரிமை நீதிமன்றத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது   பலம் வாய்ந்ததொரு வெற்றியாகும். பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்கு எதிர் தரப்பினர் முன்னெடுத்த சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.

தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.  என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.



ஜனாதிபதி  பாராளுமன்றத்தை கலைத்தமை மற்றும் ஜூன் மாதம் 20ம்  திகதி பொதுத்தேர்தலை நடத்தவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட  மனுக்கலை  பரிசீலனை செய்த நீதியரசர் குழாம் அவற்றை முழுமையாக இரத்து செய்துள்ளனர்.

எதிர் தரப்பினர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் இன்று தோல்வியளடைந்துள்ளன.

  நல்லாட்சி அரசாங்கம் மக்களின்  அடிப்படை உரிமைகளான தேர்தல் உரிமையினை தொடர்ந்து பிற்போட்டது. இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலையும்  கடந்த அரசாங்கம் பிற்போட்டதை தொடர்ந்து நீதிமன்றத்தின்  தீர்ப்பிற்கு அமையவே உள்ளுராட்சி மன்ற தேர்தல் 2018ம் ஆண்டு இடம் பெற்றது. 

 மாகாண சபை தேர்தலும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு   காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.

 எதிர் தரப்பினர் தங்களின் கட்சி உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு  காண்பதற்காக  பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போட முயற்சி செய்தார்கள். இவர்களது முயற்சி   நீதிமன்றத்தினால் தோற்கடிக்கப்பட்டது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்றில் ஒரு  திருப்பு முனையாக  காணப்படுகிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பினை கருத்திற் கொண்டு தேர்தல் ஆணைக்குழு பொதுத்தேர்தலை   விரைவாக   நடத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின்  நிலைப்பாடாகவும் உள்ளது.  தேர்தலை  நடத்துவதற்கு  அரசாங்கம் உரிய  ஒத்துழைப்பினை   வழங்கும். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59