அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் யார் ? - பட்டியலை வெளியிட்டது போப்ஸ் சஞ்சிகை

Published By: Digital Desk 4

02 Jun, 2020 | 04:46 PM
image

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமை இம்முறை நட்சத்திர டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரருக்கு கிடைத்தது.

அதிக வயதில் தரவரிசையில் முதலிடம் ...

அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ வணிக இதழ் ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

இதன்படி 2019 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆ திகதி முதல் 2020 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில் சம்பாதித்த பரிசுத்தொகை, ஊதியம், போனஸ், போட்டிக்கட்டணம், விளம்பர ஒப்பந்த வருமானம், காப்புரிமைத் தொகை ஆகியவற்றை மதிப்பிட்டு உலக அளவில் கடந்த ஓராண்டில் அதிக வருமானம் ஈட்டிய வீர, வீராங்கனைகளின் முதல் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது போப்ஸ் சஞ்சிகை.

இந்தப் பட்டியலில் எப்போதும் போல கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கோல்ப், குத்துச்சண்டை, கார்பந்தட வீரர்களே இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

கால்பந்து நட்சத்திரங்கள் ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரை பின்னுக்கு தள்ளி முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையாளருமான சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் முதல்முறையாக அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலின் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அவர் ஓராண்டில் குவித்த தொகை 106.3 மில்லியன் அமெரிக்க டொலராகும். இது இலங்கை மதிப்பில் ஏறக்குறைய ரூ.1967  கோடிக்கும் அதிகமாகும். 

இந்த போட்டிகளில் வெற்றியீட்டிய பரிசுத்தொகைக்காக இலங்கை மதிப்பில் ரூ.116 கோடியாகவும், விளம்பர ஒப்பந்த தொகை ரூ.1851 கோடியாகவும் உள்ளது. 38 வயதான ரொஜர் பெடரர் கடந்த 2 ஆண்டுகளாக எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை. 

ஆனாலும் விளம்பர ஒப்பந்தங்களின் மூலம் அவருக்கு பணமழை கொட்டியுள்ளது. குறிப்பாக ஜப்பான் ஆடை தயாரிப்பு நிறுவனமான யுனிக்லோ 10 ஆண்டு கால ஒப்பந்தம் அடிப்படையில் பெடரருடன் ரூ.7,530 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

‘போர்ப்ஸ்’ சஞ்சிகை 30 ஆண்டுகளாக இத்தகைய பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஒருவர் முதலிடம் பெற்றிருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

இரண்டாவது இடத்தில் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ  ரொனால்டோ உள்ளார். இவரது ஓராண்டு வருமானம் 105 மில்லியன்  அமெரிக்க டொலராகும்.

மற்றொரு கால்பந்தாட்ட நட்சத்திரமான ஆர்ஜென்டீனாவின் லயனொல் மெஸ்ஸி 104 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

பிரேஸில் கால்பந்து வீரர் நெய்மார் நான்காவது இடத்திலும், அமெரிக்க கூடைப்பந்து வீரர் லிப்ரோன் ஜேம்ஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் வீராங்கனைகளில் இரண்டு பேர் மாத்திரமே இடம்பெற்றுள்ளனர். அவர்கள், டென்னிஸ் பிரபலங்களான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ஆவர்.

பணக்கார விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பில், கிரிக்கெட்டிலிருந்து ஒரே ஒரு வீரர் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

அவர், இந்திய  கிரிக்கெட் அணித்தலைவர்  விராட் கோஹ்லி. இவர் இந்தப் பட்டியலில் 26 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன்  66 ஆவது இடத்தை வகிக்கிறார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22