பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளுக்கான விலையை அதிகரிக்க தீர்மானம்

Published By: J.G.Stephan

02 Jun, 2020 | 04:00 PM
image

(ஆர்.யசி)

மாஜரின், பாம் எண்ணெய் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலமும் அறிவித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.



நாட்டின் அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்து ஏனைய பொருட்கள் அனைத்தினதும் இறக்குமதியில் கட்டுபாடுகள் விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் வெதுப்பகங்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து அகில இலங்கை வெதுப்பக சங்கத்தின்  தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறுகையில்,

வெதுப்பக உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் கலப்பும் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வெதுப்பக உணவுகளுக்கு பாம் எண்ணெய் மற்றும் மாஜரின் முக்கியமானதாகும். அதுபோல் முட்டையும் அத்தியாவசியமான பொருளாகும். இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதற்கு அமைய மாஜரின் மற்றும் பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்ய அதிகளவில் பணம் செலவிட வேண்டியுள்ளது. ஒரு கிலோ பாம் எண்ணெய்க்கான இறக்குமதி வரி 300 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனால் வெதுப்பக உரிமையாளர்கள் அதிக பணம் செலவழித்து இவற்றை இறக்குமதி செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மாஜரினுக்கான வரி 215 ரூபாவாக இருந்தது. இதனை ஒரேடியாக 650 ரூபாவாக  அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறு அதிக வரிகளை செலுத்தி இறக்குமதி செய்ய முடியாது. அவ்வாறு இறக்குமதி செய்தால் அதிக விலையில் வெதுப்பக உணவுகளை விற்க வேண்டிவரும். எனவே இறக்குமதி பொருட்களுக்கு வரி சலுகை வழங்க வேண்டும் என ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளோம். அதற்கமைய எமக்கு வரி சலுகைகள் வழங்க வேண்டும். இல்லையேல் பாண் உள்ளிட்ட சகல வெதுப்பக உணவுகளுக்கும் விலை அதிகரிக்க வேண்டி வரும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:17:29
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29