எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் : தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

Published By: J.G.Stephan

02 Jun, 2020 | 03:01 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில்  எலிக்காய்ச்சல் பரவுவதற்கான அபாயம் அதிகம் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவு எச்சரித்துள்ளது. இதன் காரணமாக நெல் உள்ளிட்ட ஏனைய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொற்று நோயியல் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளதாவது :



நாடளாவிய ரீதியில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினாலும், தரிசு நிலங்களில் பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாலும் எலிக் காய்ச்சல் பரவக் கூடிய ஆபத்து காணப்படுகிறது.

அத்தோடு கடந்த சில வாரங்களாக கடும் மழையுடனான காலநிலை நிலவியதால் எலிக் காய்ச்சல் தீவிரமடையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

எலிக் காய்ச்சலானது பற்றீரியா மூலம் பரவக் கூடிய நோயாகும். எலி உள்ளிட்ட சில கால்நடைகளின் சிறுநீர் மூலம் இந்த பற்றீரியா பரவக் கூடும்.

வயல்கள் மற்றும் நீர் அகழிகள் உள்ளிட்ட நீர் நிறைந்துள்ள இடங்களில் இந்த பற்றீரியாக்கள் அதிகளவில் காணப்படும். நீரிலுள்ள இந்த பற்றீரியாக்கள் வெட்டுக்காயங்கள், கண், வாய் என்பவற்றின் மூலம் மனித உடலில் செல்லக் கூடியவையாகும்.

எலிக்காய்ச்சலுக்கான முக்கிய அறிகுறிகள் திடீர் காய்ச்சல் , தசைப்பிடிப்பு , கடுமையான முதுகு வலி என்பனவாகும். இவை தவிர கண் சிவப்பாதல், வாந்தி, தலைவலி, சிறு நீர் நிறம் மாறுதல், சிறு நீர் குறைவடைதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளும் ஏற்படும்.

நெல் மற்றும் பிற விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தல் அத்தியவசியமாகும்.

இந்நோய் தாக்கத்திற்குள்ள உள்ளானவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று உரிய மருந்துகளைப் பெற்றுக் கொள்ளவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கான மருந்துகளை வாரம் ஒரு முறை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கான மருந்துகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டால் நோய் தீவிரமடைந்து மரணம் ஏற்படக் கூடும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:41:32
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01