தேர்தலை துரிதப்படுத்துங்கள் : தேர்தல் ஆணையாளருக்கு ஆளும் கட்சி வலியுறுத்தல்

01 Jun, 2020 | 06:34 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல்   ஆணைக்குழுவின்  உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்திற்கு எதிராகவே  செயற்படுகின்றார். தேர்தல் ஆணைக்குழு  உறுப்பினர்களின் கூட்டுப் பொறுப்பு  கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார  துறையினரது  பரிந்துரைகளுக்கு  முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் ஆணையாளர் பொதுத்தேர்தலை  விரைவாக  நடத்த உரிய  நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என ஸ்ரீ  லங்கா பொதுஜன பெரமுனவின்  தவிசாளர்  பேராசிரியர்  ஜி. எல்.  பீரிஸ்  கோரிக்கை  விடுத்தார்.

பொதுஜன பெரமுனவின்  காரியாலயத்தில் இன்று  திங்கட்கிழமை   இடம் பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிய  பாராளுமன்றத்தை  விரைவாக  கூட்டுவதே      தேசிய   தேவையாக  காணப்படுகின்றது.   கலைக்கப்பட்ட  பாராளுமன்றத்தை  கூட்டுவதால் எவ்வித  பயனும்   ஏற்படாது.  கொரோனா  வைரஸ்  பரல் தற்போது  கட்டுப்பாட்டுக்குள்  உள்ளது.   ஆகவே பொதுத்தேர்தல்   வெகுவிரைவில் நடத்த வேண்டும். என்பதே      எதிர் தர்ப்பினரை    தவிர்த்து  ஏனைய  தரப்பினரது  எதிர்பார்ப்பாக உள்ளது.

பொதுத்தேர்தலை  பாதுகாப்பான  முறையில் நடத்த முடியும் என  சுகாதார  சேவைகள்  பணிப்பாளர் நாயகம்    வழங்கிய  அறிக்கை   நீதிமன்றில்  ஆளும்  தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  ஜனநாயக ரீதியில் பொதுத்தேர்தலை  நடத்தி  பலமான அரசாங்கத்தை    ஸ்தாபிப்பது  ஜனாதிபதியின்  பிரதான  இலக்காக  உள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்  தொடர்ந்து  அரசாங்கத்திற்கு எதிராக  செயற்படுகிறார். ஆணைக்குழு  உறுப்பினர்களின் கூட்டுப் பொறுப்பு  கேள்விக்குற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்  சுகாதார  தரப்பினரது  பரிந்துரை,  மற்றும் தற்போதைய     பாதுகாப்பு  சூழ்நிலை ஆகியவற்றுக்கு   முக்கியத்துவம்  வழங்கி பொதுத்தேர்தலை விரைவாக   நடத்துவதற்கான  நடவடிக்கையினை   எடுக்க  வேண்டும்.   ஜனநாயக   முறையில்  பொதுத்தேர்தலை  நடத்துவதற்கான அனைத்து    ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் ஆணைக்குழுவுக்கு  வழங்கும்.

ஏப்ரல் 21   ஈஸ்டர் தின  குண்டுத்தாக்குதலுக்கான   காரணிகள் தற்போது  பகுதியளவில்  வெளியாகியுள்ளன.  ஆனால் ஆரம்ப மற்றும் உண்மை  காரணிகள்,   தாக்குதலின்  பின்னிணியில் இருந்தவர்கள் யார் என்ற   காரணிகள்  இதுவரையில்  வெளியாகவில்லை.  நல்லாட்சி அரசாங்கம் தேசிய  பாதுகாப்பினை  அரசியல் தேவைக்காக    பலவீனப்படுத்தியதன் விளைவை  நாட்டு மக்களே அனுபவித்தார்கள்.     வெகுவிரைவில்  குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58