ஜனாதிபதி இன்றிலிருந்து அரசியலமைப்பிற்கு முரணாகவே ஆட்சியை தொடர்கிறார் - நளின் பண்டார

Published By: Digital Desk 3

01 Jun, 2020 | 06:11 PM
image

(செ.தேன்மொழி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தற்போது உரிய நேரத்தில் தேர்தலும் நடத்தப்படாத நிலையில் அவர் இன்றிலிருந்து அரச ஆட்சி முறையையே முன்னெடுத்து வருகின்றார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்றிலிருந்து  அரசாட்சி முறையை  முன்னெடுத்துவருகிறார். பாராளுமன்றத்தின் ஆயுற்காலம் இன்னும் முடிவுறாத நிலையில் , ஜனாதிபதி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி இடைகாலத்தில் பாராளுமன்றத்தை கலைத்துள்ளதுடன் , உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாத நிலையில் , நாட்டின் பாராளுமன்றம் இயங்காத நிலையில், தற்போது அரச ஆட்சிமுறையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ஆயிரம் ரூபாவைக் கொண்டு குடும்பமொன்று வாழமுடியுமா? இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இராணுவத்தினர் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல்காலத்தில் வீரர்களாக சித்தரிக்கப்பட்ட வெளிநாட்டு பணியாளர்கள் இன்று தற்கொலை குண்டுதாரிகலாள சித்தரிக்கப்படுகின்றனர். இதேவேளை கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பெரும் சேவையாற்றி வருகின்ற சுகாதார பிரிவினரும் இன்று வீதியில் தள்ளப்பட்டுள்ளனர். இதுவே தற்போதைய அரசாங்கத்தின் நிலைமை.

வைரஸ் பரவல் காரணமாக தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லாத போதில் , பாராளுமன்றம் இயங்காததால் அரசாங்கத்திடம் எதிர்கட்சி நேரடி விமர்சனங்களை மேற்கொள்ள முடியாத நிலைமையும் தோற்றம் பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55