ஐக்கிய இராஜ்ஜியத்தின் Liverpool John Moores பல்கலைக்கழகத்துடன் Northshore Campus கைகோர்ப்பு

31 May, 2020 | 09:03 PM
image

ஐக்கிய இராஜ்ஜியத்தின் Liverpool John Moores பல்கலைக்கழகத்துடன் (LJMU) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மை ஒப்பந்தத்தில் ழேசவாளாழசந ஊயஅpரள கம்பஸ் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த பங்காண்மை ஒப்பந்தத்தினூடாக இரு கல்விசார் நிறுவனங்களும் இணைந்து கற்பித்தல் தேவைகளை கட்டியெழுப்புவதற்கு ஏதுவான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கும், குறிப்பாக குறிப்பாக ஆய்வு பத்திரங்கள், வெளியீடுகள் மற்றும் தகவல்களுடன் கூடிய ஒன்றிணைந்த கற்கைநெறிகளை விருத்தி செய்தல் மற்றும் செயற்படுத்தல்களுக்கு வாய்ப்பாக அமையும்.

இதற்கு மேலதிகமாக இரு நிறுவனங்களினும் மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்கள் தமக்கிடையில் பரஸ்பர ஈடுபாடு புரிதலுடன் கூடிய பொது பாடவிதானங்களை அபிவிருத்தி செய்வதற்கு வாய்ப்பாக அமையும்.

இலங்கை வாழ் மாணவர்களுடைய உயர் கல்விசார் நடவடிக்கைகளில் இப்பங்காண்மை ஒப்பந்தம் மிகப்பெரும் பங்காற்றுவது மட்டுமன்றி, இதன் பிரகாரம் மாணவர்கள் தமது அடிப்படை பட்டமுன்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு கற்கைகளுக்கான தகைமைகளை LJMU உடன் இணைந்து இலங்கையில் இருந்தவாறே பெற்றுக் கொள்ள முடியும்.

1. Northshore கம்பஸ் உபவேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர். நாலக ஜயகொடி (இடம்) மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இயன் ஜி. கம்பெல் (வலம்) ஆகியோர் காணப்படுகின்றனர். 

இந்த பங்காண்மை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில் Northshore Campus மிகவும் பெருமிதமடைகின்றதென அதன் உபவேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் நாலக ஜயகொடி அறிவித்தார்.

மேலும், கல்விஃ தொழிற்துறைசார் நிபுணத்துவ அறிவை பெற்றுக் கொடுப்பதோடு மட்டுமன்றி நவீன தொழில்நுட்ப வசதிகளை மாணவர்களுக்கு வழங்குவதுடன் கூடிய பல பெறுமதி சேர் சேவைகளை வழங்க இவ் ஒப்பந்தம் வழிசமைத்துள்ளது. 

பேராசிரியர் ஜயகொடி மேலும் தெரிவிக்கையில், Northshore Campus தனது மாணவர்களுக்கு சிறந்த கல்வி அனுபவம் மற்றும் அறிவை பெற்றுக் கொடுப்பதற்கு உகந்தாற் போல் முழுமையான  அர்ப்பணிப்புடனும் செயலாற்றுகின்றமைக்கு மேலதிகமாக, இப்பங்காண்மை ஒப்பந்தத்தினூடாக நீண்ட கால அடிப்படையில் பரஸ்பர அனுகூலமான அறிவு மற்றும் நிபுணத்துவ பகிர்வை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஐக்கிய இராஜ்ஜியத்தின் Liverpool John Moores பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் இயன் ஜி. கம்பெல் கருத்துத் தெரிவிக்கையில், Northshore கம்பஸ் உடன் இந்த பங்காண்மையில் கைச்சாத்திடுவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். பேராசரியர் நாலக  ஜயகொடி மற்றும் அவரின் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றக் கிடைத்ததையிட்டும், இலங்கை மாணவர்கள் தமது உயர் கல்வியை தம்முடன் இணைந்து தொடர சந்தர்ப்பம் அளித்தமையையிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். 

இந்த பங்காண்மை ஒப்பந்தத்தினூடாக, LJMU மற்றும் Northshore Campus இணைந்து கற்கைகளை வடிவமைப்பதின் முதற்கட்டமாக பொறியியல், தொழில்நுட்பம், கணினி மற்றும் விஞ்ஞானம் பிரிவுகளில் கவனம் செலுத்தப்படும்.

மேலும் Northshore Campus தமது முழுமையான உட்கட்டமைப்பு வளங்களை பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட கற்கை நெறிகளின் தகைமைகளை மாணவர்களுக்கு முழுதாக கொண்டு சேர்க்கும் என அதன் உபவேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நாலக ஜயகொடி நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன், தற்போதைய உலகளாவிய கொவிட்-19 தாக்கத்தால் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் முகமாக தனது விரிவுரை முறைகளை நேர்ப்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது உறுதியாக செயற்படுகின்றது.

2. கொழும்பில் அமைந்துள்ள நவீன வசதிகள் படைத்த Northshore கம்பஸ்

இலங்கையின் முன்னணி உயர் கல்வி நிலையமான Northshore Campus, எப்போதும் போல் தனது சகல செயற்பாடுகளையும் புத்தாக்கத்துடன் வினைத்திறன் வாய்ந்ததாகவும் மட்டுமன்றி சமூகத்தில் உடனடி வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடிய பட்டதாரிகளை அறிமுகப்படுத்துவதில் மிகவும் சிரத்தையோடு  செயற்பட்டு வருகின்றது.

Northshore Campus பல்கலைக்கழகம் 1823 ஆம் ஆண்டு எந்திரவியல் கல்வியகமாக தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது ஐக்கிய இராஜ்ஜியத்தின் தரப்படுத்தலில் 31 ஆம் இடத்தையும், உலகளாவிய ரீதியில் தரப்படுத்தலில் 401 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது என்ற தரவை இந்த பந்தியில் பகிர்ந்து கொள்வதில் Northshore Campus பெருமிதம் கொள்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57