மஹேல ஜயவர்தனவின் விளக்கத்தால் நாட்டு மக்கள் அனைவரும் தெளிவுற்றுள்ளனர் : சுஜீவ சேனசிங்க

Published By: J.G.Stephan

31 May, 2020 | 08:20 PM
image

(செ.தேன்மொழி)

அமைச்சர் பந்துல குணவர்தனவின் கருத்துக்கு ஹோமாகம மற்றும் கொழும்பு மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பதிலளிப்பார்கள் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவசேனசிங்க, பந்துல இதுபோன்ற பல கருத்துகளை தெரிவித்து பலதடவை விமர்சிக்கப்பட்டவர் என்றும், அவர் எப்போதுமே ராஜபக்ஷாக்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு தனது எண்ணத்தை நிறைவேற்ற முயற்சிப்பவர் என்றும் கூறினார்.



அவரது இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற  விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அமைச்சர் பந்துல குணவர்தன காலத்திற்கு காலம் ஏதாவது கருத்தை தெரிவித்து பலர் மத்தியில் பெரும் விமர்சனங்களுக்குள்ளாகி வருபவர்.

அதற்கேற்றாற்போல் தற்போது கொரோனா நெருக்கடிக்கு  மத்தியில் சர்வதேச விளையாட்டு அரங்கை அமைக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

அவர் ராஜபக்ஷாக்களை மிக சூட்சுமுகமான முறையில் அவரது கருத்துக்க ஆதரவளிக்குமாறு அவர்களுடன் கலந்துரையாடியே அவரது திட்டத்தை செயற்படுத்த முயற்சிப்பவர்.

தாமரை மொட்டை காண்பித்து அவர்களை தன்வசப்படுத்திக் கொள்வார். ஆனால் இம்முறை கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்தனவின் விளக்கத்தினால் நாட்டு மக்கள் அனைவரும் இது தொடர்பில் தெளிவுற்றுள்ளனர். இதற்கு நாம் மஹேலவுக்கே நன்றி செலுத்த வேண்டும்.

நாட்டில் பல சர்வதேச விளையாட்டுரங்குகள் காணப்படுகின்றன. அவற்றை மேலும் அபிவிருத்தி செய்வதை விடுத்து புதிதாக ஒரு விளையாட்டு அரங்கை அமைப்பது என்பது இலகுவான செயற்பாடு கிடையாது.

இந்நிலையில் இதற்கு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும்  எதிர்பு தெரிவித்துள்ள நிலையில் , தொடர்ந்தும் விளையாட்டரங்கை அமைப்பதற்கு முயற்சிப்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் அவருக்கு பதில் அளிப்பார்கள். ஹொமாகம மக்கள் மாத்திரமல்ல கொழும்பு மக்களும் அவருக்கு உரிய பாடத்தை கற்பிப்பார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22