சித்தி­ர­வ­தைக்கு முற்­றுப்­புள்ளி என்ற தலைப்பில் இன்று பேரணி

Published By: Robert

30 Jun, 2016 | 10:17 AM
image

மனித உரி­மைகள் ஆணை­க்­குழு இன்று சித்தி­ர­வ­தைக்கு முற்­றுப்­புள்ளி என்ற தலைப்பில் பேரணி ஒன்றை நடத்­த­வுள்­ளது.

இன்று நாம் சித்­தி­ர­வதை தொடர்பில் அதி அவ­­தானம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. ஏனெனில் சித்­தி­ர­வதை என்­பது கடந்­த பல தசாப்த கால­மாக பாரிய சிக்­க­லாக உரு­வெ­டுத்துள்ள ஒரு கார­ணியாகும்.

இலங்­கையில் சித்­தி­ர­வ­தை­­க­ள் அதி­க­ரித்­துள்­ளன. அது தொட­ர்பில் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விற்கு கிடைக்­கும் முறைப்­பா­டு­களின் எண்­ணிக்­கையும் அதி­­க­ரித்­துள்­ளன. எனவே மனி­த உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் சட்­டங்­களை வலு­வாக்கம் செய்­வது தொடர்பில் ஆராய்ந்து வரு­வதாக மனித உரி­மைகள் ஆணைக்­கு­­ழுவின் ஆணை­யா­ளர் அம்­பிகா சட்­கு­ண­நா­த­ன் தெரி­வித்­தார்.

அதே­நேரம் சித்­தி­ர­வ­தைகளின் துணைக்­கொண்டு முன்­னெ­டுக்­கப்­­படும் விசா­ர­ணை­களில் உண்­மைகள் வெளிச்­சத்­திற்கு வரும் சந்­தர்ப்பம் மிகவும் குறைவு என்றும் அவர் சுட்­­டிக்­காட்­டி­னா­ர்.

மனித உரி­மைகள் ஆணைக்­கு­­­ழுவின் தலைமை அலு­வ­ல­கத்திள் நேற்று  இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்

எமது நாட்டில் கடந்த காலங்­களில் காணாமல் போதல் உள்­­ளி­ட்ட விட­யங்கள் குறை­வ­டைந்­துள்­ளன. எமக்கு 10 பிர­தேச அலு­வ­ல­கங்­க­ளும் உள்­ளன. அங்கும் இவ்­வா­றான முறைபா­டுகள் பதி­வா­க­வில்லை. கொடூ­ர­மான முறையில் பதி­வா­க­வில்லை.ஆனால் சித்­தி­ர­வதை அதி­க­ரி­க்­கின்­றது. விஷே­ட­மாக பொலிஸ் தடுப்பில் உள்­ள­வர்கள் மீதான சித்­தி­ர­வ­தைகள் அதி­க­ரிக்­கின்­றன.

சர்­வ­தேச மட்டத்­திலும் இது பாரிய பிரச்­சினையாகி­யுள்­ளது. அத­னால் மனித உரி­மைகள் ஆணைக்­குழு இதற்­கு பொறுப்பு கூறவேண்­டிய நிறு­வனம் என்ற பொறுப்பை கொண்­டுள்­ளது. அதனால் சித்­தி­ர­வதைகளை ஒரு­போதும் நியா­யப்­ப­டுத்த இட­ம­ளிக்க கூடாது என்ற அடித்­த­ளத்­தி­லி­ருந்து நாம்செயற்­ப­டு­­கின்­­றோம்.

அர­சி­ய­ல­மைப்­பிலும் அவ­மானம் மற்றும் சித்­தி­ர­வ­தை­யி­லி­ருந்து விடு­பட்டு வாழும் சுதந்­திரம் எமது நாட்டில் உள்ள சகல பிர­ஜை­க­ளுக்கும் உள்­ள­தென சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­­ல­மைப்பில் இதற்கு வரை­­யரை விதிக்­கப்­ப­ட­வில்லை. மோதல் ஒன்றின் போதும் இடம்­பெறும் சித்­தி­ர­வ­தை­களை கூட நியா­யப்­ப­டுத்தும் உரிமை எவ­ருக்கும் வழங்­கப்­ப­ட­வில்­­லை.

விஷே­ட­மாக 1994 ஆண்­டில் கொண்­டு­வ­ரப்­பட்ட சட்­ட­மொன்­றுக்­க­மைய இலக்கம் 22 ஆம் சடத்தின் பிர­காரம் சித்­தி­ர­வ­தை­தக்கு எதி­ரான சர்­வ­தேச நல்­லி­ணக்கம் தொடர்­பி­லான சட்டம் இலங்கை சட்­ட­க்­கோ­வை­யிலும் உள்­ளீர்க்­கப்­பட்­டது.

இன்று முன்­னெ­டுக்­க­வுள்ள ஆர்ப்­பாட்­டத்தில் இவ்­வா­றான சித்­தி­ர­வை­த­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்­பது தொடர்பில் நாட்டு மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­த­வுள்ளோம். இது சர­ளமான காரியம் அல்ல என்­ப­து எம­க்கு தெரி­யும் ஆனால் இது எமது கட்­டாய கட­மை. ஆனா­ல் ஆணைக்­கு­ழுவின் தொழில்­நுட்ப முறை­மை­களை மட்­டும் கொண்டு எம்மால் இதனை சாத­க­மாக நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யா­து. எனவே மக்­களின் ஒத்­து­ழைப்பும் எமக்கு அவ­சி­ய­மா­கும்.

தற்­போது சித்­தி­ர­வ­தை­கள் கனி­ச­மாக அதி­­க­ரித்­துள்­ளன. அதனால் மக்­க­ளுக்கு எம்­முடன் கைகோர்த்து வன்­மு­றை­களை புறக்­கணிக்க உதவ வேண்டும். இன்று காலை ஒன்­பது மணிக்கு பாட­சாலை மாண­வர்கள் முப்­படை மற்றும் ஆணைக்­கு­ழுவினர் ஒன்­றி­ணைந்து இந்த பேர­ணியை ஆணைக்­கு­ழுவில் அலு­வ­லகத்­தி­லி­ருந்து கொழும்பு சுதந்­திர சதுக்கம் வரையில் முன்­னெ­டுக்க உள்ளோம் கடந்த 26 ஆம் திகதி இடம்­பெற்ற சர்­வ­தேச தினத்­தி­னை­ய­டுத்து இந்த பொதுப்­பே­ரணி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­து.

இத­னூடா­க இல­ங்­கையில் சாதா­ர­ண­மாக கரு­தப்­படும் சித்­தி­ர­வ­தை ஒரு பாரிய குற்றம் என்­பது தொடர்பில் மக்­க­ளுக்கு தெளிவுப­டுத்­தவே நாம் முயற்­சிக்­கின்­றோம். அதே­நேரம் பொலிஸார் மட்டு­மன்றி பொது­மக்களும் தமக்கு தேவை­யான தக­வல்­களை பெற்­றுக்­கொள்ள சில சந்­தர்ப்­பங்­களில் சித்­தி­ர­வ­தை­களை ஆயு­த­மாக கையா­ளு­­கின்­றனர்.அதிலி­ருந்து விடு­படும் வகை­யி­லான தெளி­வு படுத்­தல்­களும் அவ­சி­ய­மா­க­வுள்­ள­து.

அத்துடன் மனித உரி­மைகள் ஆணைக்குழு சோதனை நட­வ­டிக்­கை­களை நீண்­டாலம் தொடர்­வ­தில்லை என்ற குற்­ற­சாட்டு உள்­ளது. ஆனால் நாம் ஒரு வழக்கை தொடர்ந்து முன்­னெ­டுத்­துச் சென்று உயர் நீதி மன்றம் வழக்கை பொறுப்­பேற்­ற­தும் அதன் பின்னர் நீதி­மன்ற அதி­கா­ரத்தின் பிர­கா­ர­மமே அந்த வழக்கு தொடர்ப்­பட வேண்டும் எமக்கு அதன் பின்­ன­ராக காரி­யங்­க­ளுக்கு அதி­காரம் இல்லை.

ஆனால் பாதிக்­கப்­பட்­வ­­ருக்கு நஷ்­ட­யீடு பெற்­றுக்­கொ­டுக்­கவும் பாதிப்­பை ஏற்­ப­டுத்­தி­ய­வ­­ருக்கு தண்­டனை வழங்­கு­மாறு பணிப்ப­தற்­கு­மா­ன அதி­காரம் எம்மை சார்ந்­துள்­ள­து. அதே­நேரம் குற்ற வழ­க்குளின் போது சித்­தி­ர­வதை மூலம் உண்­மையை வெளிச்சத்­திற்கு கொண்டுவர முயற்­சிக்கும் சந்­தர்ப்­பங்கள் அதிகம். எனவே சித்­தி­ர­வ­தைகள் ஊடா­க உண்­மை­களை வெளிக்கொண்டு வந்த சந்­த­ரப்­பங்கள் நூற்­­றுக்கு 5 வீத­மா­கவே பதி­வா­கி­யு­ள்­ளன.

அதனால் அந்த முறையை ஜன­நா­யக நாடுகள் ஏற்­றுக்­கொள்­வ­தில்லை. எமது நாட்டில் சித்­தி­ர­வ­தைகள் ஊடாக பெற்­றுக்­கொண்ட சாட்­சியை பயன்­ப­டுத்த முடி­யாது. அதனால் அதற்­கான மாற்று முறை­மை­களை கையா­ள பொலி­ஸா­ருக்கு பயிற்­று­விப்­புக்கள் வழங்­கப்­பட வேண்டும் மனோ­தத்­துவ ரீதியில் சாட்­சி­யங்­களை பெற முயற்­சிப்­பது வர­வேற்­கத்தக்­கது என்­றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04