சவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு

Published By: Digital Desk 3

31 May, 2020 | 05:19 PM
image

சவுதி அரேபியாவில்  இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் மசூதிகள் மதவாழிபடுகளுக்காக திறக்கப்பட்டது.

இதன் மூலம் சவுதி அரேபியா உலகளாவிய கொரேனா வைரஸ் பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

முகக்கவங்கள் மற்றும் தனிப்பட்ட பிரார்த்தனை துண்டு விரிப்புக்களை பயன்படுத்துதல், கைகுலுக்குதல்களை  தவிர்த்தல் மற்றும் குறைந்தது 2 மீற்றர் இடைவெளியில் நிற்பது போன்ற கடுமையான விதிமுறைகளுக்கு மத்தியில் மக்கள் விடியற்காலையில் தொழுகைக்காக மசூதிகளுக்கு சென்றனர்.

முதியவர்கள், 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மக்கள் வீட்டில், தொழுகைக்கு முன், முகம், கைகள் மற்றும் கால்களைக் கழுவும் செயலை செய்ய வேண்டும்.

“நான் மசூதிக்குள் நுழைந்ததும், தொழுககைக்கான அழைப்பைக் கேட்டதும் என் கண்கள் கண்ணீரை நிரப்பின. நாங்கள் மீண்டும் வழிபாட்டு இல்லங்களுக்கு வந்துள்ளோம். இந்த ஆசீர்வாதத்திற்கு கடவுளுக்கு நன்றி ”என்று ரியாத்தில் சிரியாவைச் சேர்ந்த  மாமவுன் பஷீர் தெரிவித்துள்ளார்.

புனித நகரமான மக்காவைத் தவிர்த்து, ஜூன் 21 ம் திகதி ஊரடங்கு உத்தரவு முடிவடைந்து, மூன்று கட்டங்களாக கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று சவுதி அதிகாரிகள் இம்மாத தொடக்கத்தில் தெரிவித்தனர்.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

30 மில்லியன் சனத்தொகையை கொண்ட சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 83,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 480 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏழு வளைகுடா அரபு நாடுகளில் அவுதி அரேபியா கொரோனாவால்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47