நிறைவேற்று அதிகாரமா ? சட்டவாக்குச் சபையா ? செவ்வாய்க்கிழமை முதல் அரசியல் நெருக்கடி ஆரம்பம்

Published By: Digital Desk 4

31 May, 2020 | 02:49 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

கொவிட்-2 உலக வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து இலங்கையில் பொதுத்தேர்தல் தொடர்ந்தும் இழுபறி நிலையில் உள்ளது. இந்நிலையில் மூன்று மாதங்கள் மாத்திரமே ஆயுட்காலம் கொண்ட ஜனாதிபதியின் வர்த்தமாணி அறிவிப்பு , அரசியலமைப்பின் பிரகாரம்  நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமையுடன் காலாவதியாகின்றது. 

அன்றிலிருந்து பாராளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் சபாநாயகர் வசமாவதால் நிறைவேற்று அதிகாரத்திற்கும் சட்டவாக்குச் சபைக்குமானதொரு நெருக்கடி சூழல் ஏற்பட போகின்றது.

இந்நிலையில் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் அதிகாரம் சபாநயகருக்கு உள்ளது என்ற கட்டளையை உயர்நீதிமன்றம் ஊடாக பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் ஐக்கிய தேசிய கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. எனவே ஏற்பட கூடிய அரசியல் நெருக்கடியை தவிர்க்க உயர் நீதிமன்றம் முன்வைக்க கூடிய தீர்ப்பானது முக்கியமாதொன்றாக அமைகிறது.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்புகளின் பிரகாரம் எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் செப்டெம்பர் 15 ஆம் திகதிற்கு இடைப்பாட்ட காலப்பகுதியிலேயே பொதுத்தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மறுப்புறம் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு 60 - 70 நாட்கள் அவசியம் என்பதை  தேர்தல்கள்  ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. எனவே ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கும் நீதிமன்றின் தீர்ப்பு அவசியமாகின்றது.

ஆனால் ஆளும் கட்சிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குமிடையில் ஒரு மோதல் நிலை உருவெடுத்துள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் பொது மேடைகளில் தேர்தல் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தி விமர்சிக்கின்றனர். 

இது சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பான 17 ஆவது அரசியலமைப்பின் எதிரகாலத்திற்கு ஆரோக்கியமானதாக அமையாது என்பதே எதிரக்கட்சிகளின் நிலைப்பாடாகியுள்ளது.

ஏனெனில் 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய ஆணைக்குழுக்கள் அனைத்தும் ஸ்தாபிக்கப்பட்டாலும், அவற்றுக்கான அதிகார கட்டமைப்பு 19 ஆவது அரசியலமைப்பின் ஊடாகவே வலுப்பெறுகின்றன. 

எனவே இங்கு சுயாதீன தன்மைக்கு எந்தவொரு தரப்பாலும் கலங்கத்தை ஏற்படுத்த முடியாது என்பது அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்ட விடயங்களாகும்.

இவ்வாறானதொரு புறச்சூழலில் பாராளுமன்றத்தை களைத்து வெளியிடப்பட்ட வர்த்தாணி நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமையுடன் காலாவதியாகின்றது. ஏனெனில் ஜனாதிபதியின் வர்த்தமாணி அறிவித்தலானது மூன்று மாதகாலம் மாத்திரமே செல்லுப்படியாகும். அன்றிலிருந்து பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம்அரசியலமைப்பின் ஊடாக சபாநாயகருக்கு செல்கின்றது.

எந்தவொரு நிலையிலும் களைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டப்போவதில்லை என்ற அறிவிப்பை நிறைவேற்று அதிகாரம் வழங்கியுள்ளது. ஆனால் அரசியலமைப்பின் பிரகாரம் காணப்படுகின்ற அதிகாரங்கள் நிறைவேற்று அதிகாரத்திற்கு சாதகமாக இல்லை. எனவே தான் மற்றுமொரு அரசியல் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04