கொவிட்-19 தடுப்பு மருந்திற்காக கியூபாவை எதிர்பார்க்கும் உலக நாடுகள்

Published By: Digital Desk 4

31 May, 2020 | 01:17 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

கொவிட்-19 வைரசிற்கு மருந்து கண்டுப்பிடிப்பார்களா ? இல்லையா ? என்பதே தற்போது அனைத்துலக மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளாகும்.

ஏனெனில்  குறித்த வைரஸுடன் மக்கள் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில் , புதிய வாழ்வியல் முறைக்குறித்து பன்னாடுகளும் தமது பிரஜைகளுக்கு அறிவித்து வருகின்றன. 

ஆகவே தற்போதைக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக மருந்தை கண்டுப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சந்தேக நிலையே காணப்படுகின்றது. கொவிட்-19 வைரஸ் ஒரு உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும்  இதுவரையில் பதில் கிடைக்கப்பெற வில்லை.

ஆனால், இவ்வாறான வைரஸ்கள் பரப்பப்பட்டாலோ அல்லது உலகில் போர் ஏற்பட்டாலோ அதனை மையப்படுத்தியும் பின்னணியிலும் பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் உலக அரசியலை மையப்படுத்தி காணப்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது உலகை தாக்கியுள்ள வைரஸை மையப்படுத்தி பல்வேறு அரசியல் நகர்வுகள் வல்லரசுகளுக்கிடையில் நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.

எவ்வாறாயினும் மருத்துவ உலகில் சாதனைமிக்கதொரு நாடென்றால் அது கியூபா தான். பல்வேறு புரட்சிகளுக்கு வித்திட்ட  அந்த நாடு மருத்தும் என்ற துறையில் பெரும் சாதனைப்படுத்துள்ளதை அனைத்துலகமும் அறிந்த விடயமாகும். அவ்வாறிருக்க கொவிட்-19 வைரஸிற்கு கியூபா மருந்து கண்டுப்பிடித்து விட்டதா? அல்லது அந்த முயற்சிகள் அங்கு முன்னெடுக்கப்படுகின்றதா ? என்பதை அறிவதற்கு முன்னர் கியூபா குறித்த சில பின்னணிகளை அறிவது அவசியமாகும். 

வைரஸ் தாக்கம் உலகை  உக்கிரமமாக ஆட்டிப்படைக்கையில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஜெர்மனியிலிருந்து மருத்துவர்கள் குழுவொன்று அமெரிக்கா செல்கின்றது. ஜெர்மனி மருத்துவ குழுவில் டேனியல் மெனிஷெலா என்ற வைத்திய நிபுணரும் பங்கேற்றிருந்தார். 

சுமார் 30க்கும் மேற்பட்ட மருத்துவ கண்டுப்பிடிப்பு நிறுவனங்கள் கலந்துக்கொண்ட இந்த கூட்டத்தில்  கியூரா வெக் என்ற  புதிய வகை மருந்துகளை கண்டுப்பிடிக்கும் நிறுவனத்தின் முக்கியஸ்தரே டேனியல் மெனிஷெலா என்பவர். வெகுவிரைவில் கொவிட்-19 வைரஸிற்கான மருந்தை எமது நிறுவனம் உற்பத்தி செய்து விடும் என்று இந்த கூட்டத்தின் போது டேனியல் மெனிஷெலா உறுதியளித்திருந்தார். 

ஆனால் குறித்த மருந்தை கண்டுப்பிடிப்பதாயின் அதனை அமெரிக்காவிருந்து கண்டுப்பிடிக்குமாறும் , அவ்வாறு கண்டுப்பிடிக்கும் மருந்தினை அமெரிக்காவிற்கே முதலில் தர வேண்டும் என குறித்த கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது. 

இதன் பின்னர் குறித்த வைத்திய நிபுணர் 4 நாட்களுக்கு பின்னர் நிறுவனத்திலிருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின. இவ்வாறாதொரு பின்னணியிலேயே அமெரிக்கா மருந்தை கண்டுப்பிடித்து விட்டதாக அறிவித்திருந்தது .

பல்வேறு நாடுகளும் கொவிட்-19 வைரஸ் தொற்று எதிரான மருந்துகளை கண்டுப்பிடிக்கப்போவதாக அறிவிப்புகளை விடுத்த நிலையில் இஸ்ரேலும் இதனை அறிவித்தது. இதனை தவிர உலக சுகாதார ஸ்தாபனத்துடன் பல நிறுவனங்களும் புதிய மருந்தினை கண்டுப்பிடிக்கும் போட்டியில் ஈடுப்பட்டு வருகின்றன.

சீனா தனது நாட்டில் பரவும் கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த ஏதேனும் மருந்தினை கண்டுப்பிடித்து விட வேண்டும் என்ற இலக்குடன் ஆய்வுகளில் இரங்கியது. இதன் பிரகாரம் சாஸ் வைரஸ் போன்ற வைரஸுகளுக்கான ஏற்கனவே கண்டுப்பிடிக்கப்பட்ட மருந்துகளை பட்டியலிட்டது. இவ்வாறு எடுக்கப்பட்ட பட்டியலில் முதலிடத்தில் கியூபாவின் வைரஸ் எதிர்ப்பு மருந்தான இன்டர்வெரோன் எல்பா 2பீ காணப்பட்டது. 

இந்த மருந்து 1986 ஆம் ஆண்டில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தினை பயன்படுத்தியே சீனாவில் குறிப்பிட்டளவில் கெவிட-19 வைரஸை கட்டுப்படுத்தியதாக அந்த நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அது மாத்திரமல்ல இத்தாலிக்கும் இன்டர்வெரோன் எல்பா 2பீ என்ற மருந்து கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

 

கியூபா மற்றும் சீன வைத்தியர்கள் இத்தாலியில்  கொவிட்-19 வைரஸிற்கு எதிராக குறித்த மருந்தினை பயன்படுத்தியுள்ளனர்.

பல இலத்தின் அமெரிக்க நாடுகளும் கியூபாவிடம் இன்டர்வெரோன் எல்பா 2பீ என்ற மருந்து தருமாறு  கோரிக்கைகளை விடுத்துள்ளன.

ஆனால் கியூபாவுடன் வெளிப்படையாக செயற்பட்டு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாது நிலை பல நாடுகளுக்கு  காணப்படுகின்றது. 1959 ஆண்டிலிருந்து சுமார் 60 வருட காலம் அமெரிக்க கியூபா மீது பல பொருளாதார தடைகளை விதித்துள்ளமையே இதற்கு பிரதான காரணமாகும்.  இந்த நிலை டொனல்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் கடுமையாக்கப்பட்டுள்ளது. 

சுமார் 191 பொருளாதார தடைகளை கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ளது. இவ்வாறு கியூபா மீது தடைகளை விதிக்க பிடல் காஸ்ட்ரோவின் செயற்பாடுகள் தான் காரணமா ? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழும். மருத்துவத்தை அனைவருக்கும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று கூறியது மாத்திரமன்றி அதனை நடைமுறையாகவும் செய்து காட்டியவர் பிடல் காஸ்ட்ரோ. 

மருத்துவத்தை கியூபா ஒருபோதும் வர்த்தக நோக்கில் பார்த்தில்லை என்பதே இன்றளவில் காணப்படும் உண்மையாகும். மருத்துவத்திற்கு நோபல் பரிவு பெற்ற ரிச்சர்ட் ஜே. ரொபர்ட் கியூபாவின் மருத்துவ சேவை மனிதர்களின் நலத்தை மையப்படுத்தியதே தவிர வர்த்தகத்தை அடிப்படையாக கொண்தல்ல என்று குறிப்பிட்டிருந்தார். கியூபாவின் அறிவியலும் விஞ்ஞானமும் ஒன்று சேர்ந்து மக்களுக்கு மகத்தான சேவையாற்றுகின்றனது என்பதே உண்மையாகும்.

புற்றுநோய்க்கு மருந்து கண்டுப்பிடித்து விட்டதாக கியூபா அறிவித்தமை  சாதாரண மக்கள் மத்தியில் மகிழ்சியடைய கூடிய விடயமென்றாலும் மருத்துவத்தை வர்த்தகமாக கொண்டு இயங்கும் பல நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு சகிக்க கூடியதாக இல்லை. எனவே தான் கியூபாவிலிருந்து எந்தவொரு மருந்தினையும் கொள்வனவு செய்ய கூடாது என்ற உத்தரவை அமெரிக்கா விதித்தது. 

குறிப்பாக இன்டர்வெரோன் எல்பா 2பீ  மருந்தினை உலக நாடுகள் வாங்கி விடக்கூடாது என்பதில் அமெரிக்கா பல திட்டங்களையும் வகித்திருந்தது. அவ்வாறிருக்க இந்த மருந்து சீனாவிடம் எப்படி சென்றது. சீனா , ஸ்பெயின் மற்றும் கியூபா ஆகிய மூன்று நாடுகளும் மருத்துவ ஆலோணை குழுவாக ஒன்றிணைந்து செயற்படுகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் தான் சீனாவிற்கு இன்டர்வெரோன் எல்பா 2பீ மருந்து கிடைக்கப்பெறுகின்றது.

புற்றுநோய்க்கான மருந்தினை கியூபா கண்டுப்பிடித்ததன் பின்னர் வல்லரசுகள் மிகவும் மோசமானதொரு அடக்குமுறையை திணிக்கின்றன. உலகிற்கு நீதி சொல்லித்தரும் ஐநா கூட இன்றளவில் கியூபா மீதான பொருளாதார தடை குறித்து பேச வில்லை. ஆனால் இன்று பல உலக நாடுகள் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு கியூபா மருந்து கண்டுப்பிடித்து விடும் என்ற நம்பிக்கையில் உள்ளன. இதற்கு காரணம் கியூபா மருத்துவம் மீது கொண்டுள்ள நம்பிக்கையாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04