கொட்டகலையில் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு  பொது மக்கள் அஞ்சலி!

30 May, 2020 | 05:53 PM
image

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் எடுத்துவரப்பட்ட அன்னாரின் பூதலுடல் அஞ்சலிக்காக நேற்று வேவண்டன் இல்லத்தில் வைக்கப்பட்டது.

மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டு நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் வேவண்டன் இல்லத்தில் வைத்து இன்று காலை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சர்வமத வழிபாடும், இந்து மத முறையிலான கிரியைகளும் இடம்பெற்றன.

அதன்பின்னர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை ரம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுகலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சி.எல்.எப் வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியிலும் வீதிகளில் இரு பக்கங்களிலும் காத்திருந்து மலர்தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை, கொட்டகலை நகரமெங்கும் இராணுவமும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அஞ்சலிக்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஏனையோர் திருப்பியனுப்படுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நகரங்களில் எல்லாம் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தோட்டப்பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51