அவுஸ்திரேலியாவில் தோர்ன்லி பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகே குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரின் தோர்ன்லி என்ற இடத்தில்  உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென பள்ளிவாசல் வெளியே பயங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தால் 4 வாகனங்கள் சேதம் அடைந்தன.

இந்த சம்பவத்திற்கு அவுஸ்திரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து கூறியதாவது:

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்லாமிய மக்கள் மீது அதிகரித்து வரும் வெறுப்புணர்வு கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அவுஸ்திரேலியா பொலிஸார் கூறியுள்ளனர்.