இன்றும் தொடரும் சம்பந்தனுடனான பங்காளிக்கட்சித்  தலைவர்கள் சந்திப்பு : சுமந்திரனும் பங்கேற்பார்

Published By: Digital Desk 3

29 May, 2020 | 02:08 PM
image

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

இச்சந்திப்பின்போது, பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கான வியூகங்கள், வடகிழக்கு கள நிலைமைகள், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்களால் கட்சிக்குள்ளும், வெளியிலும் ஏற்பட்டுள்ள பிரதிபலிப்புக்கள், ஆட்சியாளர்களின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை 5 மணிமுதல் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரையில் இந்தச் சந்திப்பு நீடித்திருந்ததாக தெரியவருகின்றது. 

இதன்போது, பங்காளிக்கட்சிகள் “திறந்த” மனதுடன் கூட்டமைப்பின் தலைவருடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும், சமகால அரசியல் சூழலில் கூட்டமைப்பின் ஒற்றுமை மற்றும் பலம் மிகவும் அவசியம் என்பதை மையப்படுத்தி முன்மொழிகள் செய்யப்பட்டதாகவும் மேலும் தெரியவருகின்றது. 

எவ்வாறாயினும், இக்கலந்துரையாடலின் தொடர்ச்சி இன்றையதினம் நடைபெறவுள்ளதாகவும், இதில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்கவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. 

இதேவேளை, இக்கலந்துரையாடல் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதன் காரணமாகவும், உட்கட்சி விடயம் என்பதாலும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பின்னரே பகிரப்படுமென்று கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பங்காளிக்கட்சிகள் கேசரியிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15