முக்கிய தொடர் சந்திப்புக்களை நடத்த தயாராகிறது கூட்டமைப்பு 

Published By: Digital Desk 3

29 May, 2020 | 01:30 PM
image

(ஆர்.ராம்)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்தவுள்ளது. 

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்து கூட்டமைப்பிற்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தனிப்பட்ட சந்திப்பொன்று அண்மையில் நிகழந்திருந்தது.

இதன் நீட்சியாக தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடத்தில் கையளிப்பதற்காக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சென்றிருந்த வேளையில் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட இதரவிடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடனும் சந்திப்புக்களை நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டிருந்தார். 

இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் விரைவில் கூட்டமைப்பாக சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக நேற்று இடம்பெற்ற பங்காளிக்கட்சித்தலைவர்களின் கூட்டத்தின்போது அவதானம் செலுத்தியதாக அறிய முடிகின்றது. 

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பிலும் கவனம் செலுத்திய கூட்டமைப்பின் தலைவர்கள் ஏற்கனவே பட்டியல் பிரதமர் மஹிந்த ராபஜக்ஷவிடத்தில் கையளிக்கப்பட்டள்ள நிலையில் அதுதொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டமைப்பின் தலைவர் அடுத்து வரும் நாட்களில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடவுள்ளதாகவும் அவர்களின் விடுதலை தொடர்பில் அதிகூடிய அவதானம் செலுத்தவேண்டும் என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

மேலும் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக கடமைகளை பொறுப்பேற்றுள்ள கோபால் பாக்லேயை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக சந்திப்பது பற்றியும் கூட்டமைப்பின் தலைவர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.  தனது பணிகளில் பூரணமாக இணைந்து கொண்டு ஆசுவாசமாகிய  பின்னர் அச்சந்திப்பினை மேற்கொள்வதெனவும் அவர்கள் முடிவுக்கு வந்திருப்பதாகவும் மேலும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08