அஸாத் சாலிக்கு மெய்ப்பாதுகாவலர்களை வழங்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிப்பு

Published By: J.G.Stephan

28 May, 2020 | 08:01 AM
image

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலிக்கு தேவையான மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  பாராளுமன்ற தேர்தல் 2020 அரசியல் வாதிகள், முன்னாள் ஆளுநர்களுக்கான மெய் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்தல் எனும் தலைப்பில் பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் ஆளுநர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக செயற்படும் எம். அஸாத் எஸ். சாலிக்கு வழங்கப்பட்டிருந்த மெய் பாதுகாப்பு கடந்த 2019.11.30 ஆம் திகதியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. முன்னாள் ஆளுநர்களுக்கு  தற்போதும் மெய் பாதுகாப்பாளர்கள் வழங்கப்படுகின்றன நிலையில், முன்னாள் ஆளுநர், பாராளுமன்ற  தேர்தலில் தேசிய பட்டியல் வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின்  தலைவருமான எம்.அஸாத்  எஸ். சாலிக்குரிய மெய் பாதுகாப்பாளர்கள் நீக்கியமை உசிதமான காரியமல்ல என தேர்தல்கள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.

அதனால் எம்.அஸாத் எஸ். சாலிக்கு மீண்டும் போதுமான மெய் பாதுகாப்பு  அதிகாரிகளை  வழங்க வேண்டும். அவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியாது எனின் அது தொடர்பான காரணங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை அனுப்பி தேர்தல்கள் ஆணைக்குழுவை  அறிவுறுத்த வேண்டும்.

அத்துடன் குறித்த கடிதத்தின் பிரதி ஒன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் எம்.அஸாத் எஸ். சாலிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52