கொரோனா சிகிச்சையளிக்கத் தயாராகும் இரு பழைய வைத்தியசாலைகள்

Published By: Digital Desk 4

27 May, 2020 | 09:47 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களில் நோயாளர்களாக இனங்காணப்படுபவர்களின் சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலை மற்றும் அம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலை என்பன தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மலேரியாவுக்குப் பயன்படுத்திய ...

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நேற்று செவ்வாய்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளானோர் 137 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 10 பேர் கடற்படையினராவர். 127 பேர் குவைத்திலிருந்து வருகை தந்தவர்களாவர். 

குவைத்திலிருந்து வருகை தந்தவர்களின் பி.சி.ஆர். பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் நாட்களிலும் மேலும் பலர் வருகை தரவுள்ளனர்.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களில் நோயாளர்களாக இனங்காணப்படுபவர்களின் சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலை மற்றும் அம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலை என்பன தயார்படுத்தப்பட்டுள்ளன.

கடற்படையினரில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. கடற்படையினர் மற்றும் அவர்களது உறவினர்கள் சுமார் 5000 பேர் வரையில் பல்வேறு நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 3000 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பை நிறைவு செய்து சாதாரண நிலைமையை அடைந்துள்ளனர்.

சுகாதார ஆலோசனைகள் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணைதளத்திலும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளன. அதனை அனைவருக்கும் பார்வையிட முடியும். அதற்கமைய பொது இடங்கள் மற்றும் ஏனைய இடங்களில் செயற்பட வேண்டும்.

அத்தோடு மக்கள் ஒன்று கூடும் வகையில் ஏதேனும் வைபவங்கள் ஏற்பாடு செய்யப்படுவதானால் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40