ஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டுதலின்படி விளையாடுவது கடினம்- டிராவிட்

Published By: Digital Desk 4

27 May, 2020 | 09:39 PM
image

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) புதிய வழிகாட்டுதலின்படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிக்கும் போது களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பந்தின் மீது எச்சில் தேய்க்கக்கூடாது.

கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய போட்டித் தொடருக்கு முன்னர், வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று ஐ.சி.சி. அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு சூழ்நிலைக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது என்பது நம்பத்தகுந்த விடயமாக இல்லை என ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் இணையதளமொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,

“தற்போதைய சூழ்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை தங்களது போட்டி தொடரை ஆரம்பிக்கவுள்ளதாக பேசுவது சற்று நம்பத்தகுந்த விடயமாக இல்லை. அவர்களுக்கு வேறு எந்த கிரிக்கெட் போட்டியும் இல்லாததால் இந்த போட்டி தொடரை நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக கையாளும் திறமை அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் போட்டி அட்டவணை நெருக்கடிக்கு மத்தியில் இது போன்ற நடைமுறைகளை பின்பற்றி ஏனைய நாடுகளும் போட்டியை நடத்துவது என்பது முடியாத காரியம். கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு இந்த நிலைமை மாறும் என்று நம்புகிறோம்.

போட்டி தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை எல்லாம் முடித்து தனிமைப்படுத்திய பிறகும் டெஸ்ட் போட்டியின் 2 ஆவது நாளில் ஒரு வீரருக்கு கொரோனா தொற்றின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அடுத்து என்ன நடக்கும். தற்போதைய விதிமுறையின் படி பார்த்தால் பொது சுகாதாரத்துறையினர் வந்து அனைத்து வீரர்களையும் தனிமைப்படுத்துவார்கள். அத்துடன் அந்த டெஸ்ட் போட்டி பாதியில் இரத்தாகும்.

இதனால் அந்த தொடரை நடத்துவதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணாகும். போட்டியின் போது ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டுமொத்த போட்டியையும் இரத்து செய்யாமல் இருப்பதற்கான வழிமுறையை சுகாதாரத்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசத்தரப்பினருடன் இணைந்து நாம் கண்டறிய வேண்டும்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41