அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் அனுதாபம்!

27 May, 2020 | 06:19 PM
image

அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

 ஜனாதிபதி 

 அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய சமூகத்தின் உரிமைக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய ஆறுமுகன் தொண்டமானுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு அரசாங்கத்திற்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பு என  பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க

தனது சமூகத்திற்காக நம்பிக்கையுடன் செயலாற்றிய ஆறுமுகன் தொண்டமானின் வெற்றிடத்தை, இலங்கையில் உள்ள சமூகங்கள் உணரும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரங்கல் வெளியிட்டுள்ளார்.

இரா. சம்பந்தன் 

மலையக மக்களுக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன்

“ஆறுமுகன் தொண்டமானும், நானும் வெவ்வேறு திசைகளில் பாயும் ஒரே இலக்கை கொண்ட நதிகள். இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள்” என,  முன்னாள் அமைச்சர், மனோ கணேசன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

பழனி திகாம்பரம்

அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கும் எனக்கும் இடையில் இருந்தபோதும் தனிப்பட்ட ரீதியில் எவ்வித கோபதாபங்களும் இருந்ததில்லை. அதனால் அவரது மறைவு கவலை அளிக்கிறது என,  முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன்

மலையக மக்களின உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஓயாது ஒலித்த குரல் இன்று மௌனித்து விட்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

டி.எம்.சுவாமிநாதன்

 எந்த சந்தர்ப்பத்திலும் நேர்மையாகவும் வெளிப்படைதன்மையுடன் நடந்து கொள்ளும் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆவார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீன்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலை கூட்டணி 

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கு மாத்திரமின்றி ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் பேரிழப்பாகும் என தமிழர் விடுதலை கூட்டணி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபால் பாக்லே

நேற்று மாலை ஆறுமுகன் தொண்டமனை சந்தித்திருந்த நிலையில் அவரது திடீர் மறைவை நம்ப முடியவில்லை என இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் அதிர்ச்சி அடைவதாகவும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இரங்கல் வெளியிட்டுள்ளார்.

கலாநிதி ஹிஸ்புல்லாஹ்

அமைச்சரின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும் துக்கமும் அடைவதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் அதிர்ச்சி அடைவதாகவும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இரங்கல் வெளியிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ

இ.தொ.கா தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின்  திடீர்  மரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது குடுபத்தினருக்கும்  நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுஷா சந்திரசேகரன்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு நிச்சயமாக நிரப்பப்பட முடியாத வெற்றிடமாகவே அமையும் என மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02