சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த சிறைச்சாலை காவல் அதிகாரி ஒருவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர்  இன்று (29) கைதுசெய்துள்ளனர்.

பொரளை, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரியிடமிருந்து 50 கிராம் சட்டவிரோத போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரை மாளிகாக்கந்தை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.