உலக இருபதுக்கு - 20 தொடரை ஒத்திவைப்பதில் அவசரம் காட்டக்கூடாது - மிஸ்பா

Published By: Digital Desk 4

27 May, 2020 | 04:20 PM
image

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதில் அவசரம் காட்டக்கூடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுநரும் முன்னாள் தலைவரும் மிஸ்பா உல்-ஹக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாக். அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ...

16 அணிகள் பங்கேற்கும் உலக இருபதுக்கு 20 தொடர் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15  ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க செப்டம்பர் மாதம் வரை அவுஸ்திரேலிய எல்லைக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருப்பதால், இத்தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படலாம்  என்று கூறப்படுகிறது.

அவ்வாறு இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டால், அதன்போது ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாளைய தினம் நடைபெறவுள்ள ஐ.சி.சி. நிர்வாகிகள் கூட்டத்தில் உலக இருபதுக்கு 20 தொடர் திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

இதுகுறித்து மிஸ்பா உல்-ஹக் இணையத்தளமொன்றுக்கு  அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது,

“16 அணிகள் பங்கேற்கும் உலக இருபதுக்கு 20 தொடருக்கான ஏற்பாடுகளை செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த போட்டி குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஒரு மாதமோ அல்லது அதற்கு மேலாகவோ பொறுத்து இருந்து பார்த்து எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டும். 

இந்த விடயத்தில் அவசரப்பட்டு  முடிவு எடுக்கக்கூடாது. இத்தொடரை பார்பதற்கு எல்லோரும் விரும்புகிறார்கள். சர்வதேச அளவிலான போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கும்போது கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்தி காட்டுவதற்கு இத்தொடர் சிறப்பான வாய்ப்பாக இருக்கும்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20