ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதோ..!

Published By: J.G.Stephan

27 May, 2020 | 03:33 PM
image

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் நேற்று (26.05.2020) தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் மரணமானார்.

அமைச்சரின் திடீர் மரணம், நாட்டு மக்கள், அரசியல் பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள் என அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர்கள், பொதுமக்கள், அரச பிரமுகர்கள் என அனைவரும் தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.  

மேலும், மறைந்த அமைச்சரின் பூதவுடலுக்கு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 31 ஆம் திகதி நோர்வூட் மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இறுதிக்கிரியை விபரம் வருமாறு, 

இன்று காலை(27.05.2020) மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மதத் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், பொது மக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்னாரின் பூதவுடல் நாளை (28.05.2020) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியிலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படும்.



அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) காலை 8.00 மணிக்கு, கொழும்பிலிருந்து கம்பளை வந்தடைந்து, புஸ்ஸல்லாவை வழியாக ரம்பொட வேவண்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். 

மறுநாள் (30.05.2020) காலை 7.30 மணிக்கு ரம்பொட வேவண்டன் இல்லத்திலிருந்து, லபுக்கலை நுவரெலியா, நானு ஓயா, லிந்துல, தலவாக்கலை வழியாக கொட்டகலை சி. எல். எப்(CLF) வளாகத்தில் மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். 

இறுதியாக ஞாயிற்றுக்கிழமை 31 ஆம் திகதி 1.30 மணிக்கு சி. எல். எப்(CLF) வளாகத்திலிருந்து ஹட்டன், டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கிற்கு பூதவுடல் எடுத்த செல்லப்பட்டு, பிற்பகல் 4.00 மணியளவில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47